மட்டக்களப்பு கேம்பிரிட்ஜ் முன்பள்ளியின் ( CAMBRIDGE) வருடாந்த கலைவிழாவும் மற்றும் பரிசளிப்பு நிகழ்வும். சாள்ஸ் மண்டபத்தில் இடம்பெற்றது.
ஆரம்ப நிகழ்வாக அதிதிகள் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டனர் . மங்கல விளக்கேற்றல், இறைவணக்கம், வரவேற்புரை, வரவேற்பு நடனம் ஆகிய சம்பிரதாய நிகழ்வுகளும் இடம்பெற்றன.முன் பிள்ளைப் பருவ பராமரிப்பும் அபிவிருத்திக்கும் பொறுப்பான உதவிக் கல்விப் பணிப்பாளர் திருமதி. அனுரேகா விவேகானந்தன் பிரதம அதிதியாகவும் , சிறப்பு அதிதிகளாக வைத்தியர் திருமதி V.திருகுமார் , பொது சுகாதார பரிசோதகர் T.மணிமாறன்,
மட்டக்களப்பு பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை உதவிப்பணிப்பாளர் U.யுவநாதன் அவர்களும் பங்கேற்றிந்தார்கள் .
கௌரவ அதிதிகளாக கேம்பிரிட்ஜ் முன்பள்ளியின் பணிப்பாளர்களான திரு , திருமதி சாமுவல் ஜெயா ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள் .
பாடசாலைச் சிறார்களின் ஆடல், பாடல், நாடகம்
பார்ப்போரை மேன் மேலும் பரவசத்தில் ஆழ்த்தியது.
சிறார்களின் ஆற்றல் திறனை அவர்களது கலை நிகழ்வுகள் வரித்துக் காட்டின.
சிறார்களை பயிற்றுவித்த முன்பள்ளி ஆசிரியர்கள் பாராட்டுக்கு உரியவர்கள் .
முன்பள்ளி சிறார்களுக்கு அதிதிகளால் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டர்கள்.
நிகழ்வுகளில்
பங்கேற்ற அனைத்து சிறார்களுக்கும் பரிசுப்பொதிகள் வழங்கப்பட்டன .
அதிதிகளுக்கும் பாடசாலை சமூகத்தால் நினைவு பரிசில்கள் வழங்கப்பட்டன
பெற்றோர்கள் , பொது மக்கள் நலம் விரும்பிகள் என பலரும் கலை விழாவை காண வருகை தந்திருந்தனர் .
முன்பள்ளி ஒரு பார்வை
இன்று முன்பள்ளிகளாவன, குழந்தைகளின் கல்விச்செயற்பாட்டில் அடித்தளமாகக்
காணப்படுகின்றது. முன்பள்ளிகள் என்பது குழந்தைகளுக்கு பாடங்களை கற்பிக்கும்
இடமோ, குழந்தைகளின் அறிவை வளர்க்கும் தளங்களோ அல்ல. மாறாக
சின்னஞ்சிறுசுகளை உணர்வுபூர்வமாக கட்டுப்படுத்தி ஒழுங்கான முறையில்
வழிகாட்டும் இடமாகும். இங்கு விளையாட்டின் மூலமே கற்பிக்கப்பட வேண்டும்.
குழந்தைகளை விளையாட்டு செயல்கள் மூலம் கற்பதற்கு ஊக்குவிப்பதால்
ஆர்வத்தோடு தங்கள் விருப்பம் போல் கற்கின்றனர்.
அந்த வகையில்
குழந்கைகளுக்கு முன்பள்ளி என்பது ஆரம்பக்கல்விக்கான ஒரு நிறுவனம் ஆகும்.
பெற்றோருக்கு அது ஒரு பொதுவான இடம் ஆகும். அதில் ஆசிரியரின் தலைமையில்
குழந்தைகள் கூடி மகிழ்ந்து விளையாடி தங்கள் நேரத்தை ஒன்றாக கழிக்கிறார்கள்.
இன்றைய
கால கட்டத்தில் பெற்றோர்கள் இருவரும் தொழிலுக்குச்செல்வதால் குழந்தைகளின்
வாழ்க்கையில் முன்பள்ளி தவிர்க்க முடியாத ஒரு அம்சமாகக் காணப்படுகின்றது.
முன்பள்ளிகள்
முறையான திட்டமிடல், ஒழுங்கமைப்புக்கு ஏற்ப இயங்கிக்கொண்டு வருகின்றன.
குழந்தைகள் முதன் முதலாக தங்களின் சுதந்திரத்தை அனுபவிக்கும் ஓர் இடமாக
முன்பள்ளிகள் இயங்கி வருகின்றன. அதாவது முன்பள்ளிக்கான பாடத்திட்டம்
அமைக்கும் போது அதன் செயன்முறைகள் எளிதானவற்றிலிருந்து கடினமானவற்றிற்கும்,
தெரிந்தவற்றிலிருந்து தெரியாதவற்றுக்கும் எளிதில் புரிந்து
கொள்ளக்குடியவற்றிலிருந்து புரியாத ஒன்றைக்கற்குமாறும் இருத்தல் வேண்டும்.
முன்பள்ளியில்
ஏற்படும் கற்றல் அனுபவங்களாக குழந்தைகளின் அடிப்படை பண்புகளில் மாற்றம்
ஏற்படுகின்ற வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்ளல், தங்கள் உணவு மற்றும்
விளையாட்டுப்பொருட்களை பகிர்ந்து கொள்ளுதல், தங்கள் உடைமைகளைப்பாதுகாத்தல்
போன்ற செயற்பாடுகளில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். தங்கள் வயதை ஒத்த
பிள்ளைகளுடன் உரையாடவும் அதன் மூலம் விரைவாக மொழி வளர்ச்சியை
ஏற்படுத்திக்கொள்ள முடியுமாக இருத்தல் வேண்டும்.
ஆகவே பிள்ளைகளின்
அறிவு வளர்ச்சி அல்லது மொழி வளர்ச்சியை மட்டும் ஊக்குவிக்காமல் உடல் இயக்க
வளர்ச்சி, சமூக மனவெழுச்சி வளர்ச்சி, கலை வளர்ச்சி போன்ற திறன்களுக்கும்
முக்கியத்துவம் அளிக்கக்கூடிய வகையில் உள்ளதா என ஆசிரியர் கவனத்தில் கொள்ள
வேண்டும்.








































































