(DIG) கே.எம்.யூ பிரதீப் அவர்கள் மட்டக்களப்பு மாவட்ட புதிய பிரதி பொலிஸ்மா அதிபராக பதவியேற்றார் .

 


பிலிமத்தலாவையை (Pilimathalawa) பிறப்பிடமாக கொண்ட இவர் கண்டி தர்மராஜா தேசிய பாடசாலை (Kandy Tharmarajah National School) பழைய மாணவராவார்.

1996 இல் சப் இன்ஸ்பெக்டர் (Sub Inspector) ஆக இலங்கை பொலிஸ் சேவையில் இணைந்த இவர் 30 வருட பொலிஸ் சேவையில் அனுபவமுடையவர். பொலிஸ் பரிசோதகர் (SI), உதவி பொலிஸ் அத்தியட்சகர் (ASP) , பொலிஸ் அத்தியட்சகர் (SP), சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (SSP), பிரதி பொலிஸ்மா அதிபர் (DIG) ஆகிய பதவி நிலையங்களில் இலங்கை பொலிஸ் சேவைக்காக தனது பணிகளை ஆற்றி வந்துள்ளார்.

இவர் மிக சிறந்த நேர்மையான துரிதமாக செயற்படக்கூடிய அதிகாரி என்பதும் குறிப்பிடத்தக்கது