தூய்மையான
சூழலைப் பேணுவதன் மூலம் தொற்றுநோயற்ற ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவது
குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந்த
வேலைத்திட்டத்தில் முப்படைகள், பொலிஸார், சிவில் பாதுகாப்புப் படையினர்,
உள்ளூராட்சி மன்ற ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து செயற்படுகின்றனர்.
அந்த வகையில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் பற்றிய விழிப்புணர்வை பாடசாலை மாணவர்களுக்கு ஏற்படுத்தும் நோக்கத்துடன் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிமனையின் ஒழுங்கு படுத்துதலில் மட்டக்களப்பு கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரியில் அதிபர் திரு S.தர்மதாஸ் அவர்களின் தலைமையில் விழிப்புணர்வு நாடக ஆற்றுகை முன்னெடுக்கப்பட்டது .
இதன் போது பிராந்திய சுகாதார பணிமனை வைத்தியர் இ. உதயகுமார்
அவர்களும் மட்டக்களப்பு வலைய உதவி கல்வி பணிப்பாளர் திரு பா. லவக்குமார்
அவர்களும் கலந்து நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்ததார்கள்.
மேலும் டெங்கு ஒழிப்பு தொடர்பான சிறப்புரைகளும் இடம் பெற்றது.
பொது
இடங்கள், வீதிகள் ,வீடுகளை மாத்திரம் தூய்மைப்படுத்தி பராமரித்தலோடு
நின்று விடாமல் அனைத்து பாடசாலைகளிலும் டெங்கு ஒழிப்பு
முன்னெடுக்கப்படுவதற்கு ஒவ்வொரு மாணவர்களின் பங்களிப்பு அவசியம் என
சிறப்புரையில் கூறப்பட்டது
அத்துடன் கல்லூரி மாணவிகளால் மேற்படி
கருப்பொருளுக்கமைய சிறந்ததொரு விழிப்புணர்வு நாடகமும் ஆற்றுகையும் இடம்
பெற்றது குறிப்பிடத்தக்கது
இந்நிகழ்வில் பொதுச் சுகாதார பரிசோதகரான திரு ரி.டமராஜ் அவர்கள் உள்ளிட்ட ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து சிறப்பித்ததார்கள்






-siva.jpg)

-siva.jpg)

-siva.jpg)
-siva.jpg)

-siva.jpg)

-siva.jpg)
-siva.jpg)




