Journalism Awards for Excellence" "மட்டு.துஷாராவுக்கு சிறந்த பத்திரிகையாளர் விருது"




இலங்கை பத்திரிகை நிறுவனத்தினால் வருடாந்தம் வழங்கி வைக்கப்பட்டு வருகின்ற தேசிய ரீதியிலான "சிறந்த பத்திரிகையாளர் விருதுக்கு" மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் திருமதி துஷ்யந்தி சுரேஸ் (மட்டு.துஷாரா)  தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

தமிழன் வாராந்த "ஹெல்த்" சஞ்சிகையில் மருத்துவம் தொடர்பான கட்டுரைகளை
பல வருடங்களாக தொடராக எழுதிவருவதுடன், மக்கள் நலன் சார்ந்த பல்வேறுபட்ட செய்திகளையும், ஆக்கங்களையும் வீரகேசரி மற்றும் தமிழன் நாளாந்த பத்திரிகையிலும் எழுதி வருகின்ற சிறந்த ஊடகவியலாளராகவும் திகழ்ந்து வருகிறார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு இலங்கை பத்திரிகை நிறுவனத்தினால் "சிறந்த பத்திரிகையாளர் விருது"  மருத்துவம் தொடர்பான கட்டுரை எழுதியமைக்கு கிடைக்கப்பெற்றமையும், இது இரண்டாவது தடவையாகவும் கிடைக்கவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

அவருக்கு MATTI MEDIA    குழுமத்தின் சார்பாக வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.