மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் 95,000 மில்லி லீற்றர் கசிப்புடன் 30 பேர்அதிரடியாக கைது .

 


காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல்வேறு பிரதேசங்களில் சுமார் 95,000 மில்லி லீற்றர் கசிப்புடன் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதுக்குடியிருப்பு, ஆரையம்பதி, கிரான்குளம், நாவற்குடா, தாளங்குடா, கல்லடி ஆகிய பிரதேசங்களில் பொலிஸார் நடத்திய திடீர் சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து சுமார் 95,000 மில்லி லீற்றர் கசிப்பு பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட நபர்கள் செவ்வாய்க்கிழமை (26) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.