மட்டக்களப்பு கொக்கட்டிசோலை அருள்மிகு ஸ்ரீ நரசிங்க வைரவர் ஆலய புகழ்கூறும் "சோலையூர் நரசிங்க வைரவா" இறுவட்டு வெளியீடு 2025.08.28- இடம் பெற உள்ளது .
நாளை காலை 8.30-மணிக்கு அருள்மிகு ஸ்ரீ நரசிங்க வைரவர் ஆலய முன்றலில் வெளியிடப்பட உள்ளது .
சிலப்பதிகார கலைச்சுடர் சிவஸ்ரீ தேவ சுகிர்தராஜ் மகிழடித்தீவு பாடல் ஆக்கம் ,
இசை அமைப்பு திரு.குணநாதன் யூட் நிரோசன்( js audio lab) பாடலுக்கான புல்லாங்குழல் இசை வழங்கியவர் திரு.R சேதுமாதவன்
பாடகர்கள் சிவஸ்ரீ தேவ சுகிர்தராஜ் ஐயா, திரு மோகன்தாசன்(சிரேஸ்ட விரிவுரையாளர் ) ,சிவஸ்ரீ விதுசன் ஐயா, திரு.யூட் பிரிய தர்சன், செல்வி .சுலக்சி ,செல்வி .டிலானி.
கொக்கட்டிச்சோலை ஸ்ரீ நரசிங்க வைரவர் ஆலய பரிபாலன சபையின் அனுசரணையில் இடம் பெற இருக்கும் இறுவட்டு வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளுமாறும் பொது மக்களை அன்புடன் அழைக்கின்றனர் .