
மட்டக்களப்பு கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரியில் 2024 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சா.த பரீட்சையில் சித்தி அடைந்த மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இன்றைய தினம் 2025.07.14 காலை பாடசாலை அதிபர் K.சரவணபவன் தலைமையில் பாடசாலை கலாச்சார மண்டபத்தில் இடம் பெற்றது .
அத்துடன் இணைந்து மாகாண மட்ட தமிழ்த்தின போட்டிகளில் வெற்றி பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவாகுவதற்கு உழைத்த ஆசிரியர்களும் , வெற்றி பெற்ற மாணவர்களும் கௌரவிக்கப்பட்டார்கள்
பிரதிக் கல்விப்பணிப்பாளர் N.குகதாசன் , பாடசாலை PSI இணைப்பாளர் V. லவகுமார் , உடற்கல்வி உதவி கல்வி பணிப்பாளர் T. திவாகரன்,
பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழு செயலாளரும் மட்டக்களப்பு கோவில்குள விநாயக வித்யாலய அதிபருமான திருமதி யாழினி தனுஜன், சிவானந்தா தேசிய பாடசாலை பிரதி அதிபர்,
அத்துடன் பெற்றோர் பாடசாலை பிரதி அதிபர்கள் , ஆசிரியர்கள் மாணவர்கள் அனைவரும் கலந்து நிகழ்வினை சிறப்பித்தார்கள் .
இவ் நிகழ்வின் போது 9A சித்தி பெற்ற ஐந்து மாணவர்களுக்கும் மாலை அணிவித்து பரிசுப் பொதிகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர் . மேலும் 8AB எட்டு மாணவிகளும் , 7A2B பெற்ற இரண்டு மாணவிகளும் 7ABC பெற்ற ஒரு மாணவியும் 6AB2C பெற்ற இரண்டு மாணவிகளும் கௌரவிக்கப்பட்டனர்.
உயர்தரம் கற்பதற்கு தகுதி பெற்ற 91% வீதமான மாணவர்களையும் உதவிக்கல்வி பணிப்பாளர் மற்றும் அதிபர்களாலும் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர் .
மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளை அடைவதற்கு கற்பித்த ஆசிரியர்களை பாராட்டியதுடன் ,கல்லூரியின் உச்ச பட்ச வளர்ச்சிக்காகவும் , சிறந்த பெறுபேறுகளை மாணவர்கள் அடைவதற்காகவும் தன்னலம் பாராது உழைத்து பாடசாலைக்கு பெருமை சேர்த்த ஓய்வு பெற்ற அதிபர் திருமதி N. தருமசீலன் அவர்களின் கல்விச்சேவையை பிரதி கல்வி பணிப்பாளர் N.குகதாசன் பாராட்டி பேசினார்.
இறுதியாக பாடசாலை உப அதிபர் திருமதி N. சிவநாதன் அவர்களின் நன்றி உரையோடு பாராட்டு நிகழ்வு நிறைவுக்கு வந்தது .