மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் உயர்தர தேசிய பாடசாலையில் 2024- 2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் திருமதி தவத்திருமகள் உதயகுமார் அவர்களின் தலைமையில் பாடசாலை Croft மண்டபத்தில் இடம்பெற்றது.
பாடசாலையில் 177 மாணவர்கள் க.பொ.த சாதாரண தர பரீட்சையில் தோற்றி இருந்தார்கள் .52 மாணவர்கள் 9A சித்திகளையும் ,24 மாணவர்கள் 8A-சித்திகளையும், 12மாணவர்கள் 7A சித்திகளையும் பெற்றது குறிப்பிடத்தக்கது குறிப்பிடத்தக்கது
இம்முறை 172மாணவர்கள் உயர்தரம் படிப்பதற்கு தகுதி பெற்றுள்ளார்கள் .