4 சிறுவர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 14 வயது சிறுமி உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார் .

 

 


உத்தரப் பிரதேசத்தில் 4 சிறுவர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, 14 வயது சிறுமி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
கடந்த 15ஆம் திகதி சிறுமியின் உடலம் தூக்கில் தொங்கிய நிலையில் அவரது வீட்டில் கண்டெடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
 
ஜூன் 28 ஆம் திகதி தனது 3 வயது சகோதரனுடன் வீட்டிற்கு வெளியே அமர்ந்திருந்தபோது அதே பகுதியில் உள்ள 4 சிறுவர்களால் கொடூரமாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். 
 
பின்னர் தாயாரின் முறைப்பாட்டின் அடிப்படையில், 4 சிறுவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டு சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்பட்டார்.
 
 மற்ற சிறுவர்களைத் தேடும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். 
 
இந்த சம்பவம் குறித்து எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ”இந்தியாவின் மகள்களுக்குப் பாதுகாப்பும் நீதியும் தேவை என மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.