முனைக்காடு கிராம சேவையாளர் பிரிவில் பாடசாலை வீதி உள்ளிட்ட உள் வீதிகள் துரிதமாக அபிவிருத்தி செய்யப்படுகின்றன.

 

மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முனைக்காடு கிராம சேவையாளர் பிரிவில் பாடசாலை வீதி உள்ளிட்ட உள் வீதிகள் துரிதமாக
அபிவிருத்தி செய்யப்படுகின்றன.


கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துறை சந்திரகாந்தனின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் விவசாயிகள், மீனவர்கள மற்றும்; பாடசாலை மாணவர்கள் பயணிக்க கூடிய அளவிற்கு போக்குவரத்து சேவையினை இலகுபடுத்தும் நோக்கில் விதிகள் புணரமைக்கப்படுகின்றன.


புனரமைப்பு பணிகளை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தன் மற்றும் மண்முனை தென்மேற்கு பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் குகநாதன் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.