மட்டக்களப்பு நாவலடி ஸ்ரீ மாரி கடல்நாச்சியம்மன் ஆலய வருடாந்த உற்சவம்!





















(கல்லடி செய்தியாளர்)


மட்டக்களப்பு நாவலடி அருள்மிகு ஸ்ரீ மாரி கடல்நாச்சியம்மன் ஆலய வருடாந்த உற்சவம் நேற்று திங்கட்கிழமை (26) திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகி, எதிர்வரும் 03 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலையில் திருக்குளிர்த்தி பாடிக் நாவலடி சமுத்திரக் கடலில் கும்பம் சொரிதலுடன் ஆலய உற்சவம் நிறைவு பெறவுள்ளது.

இதன்போது ஆலய உற்சவக் கிரியைகளை பிரதம பூசகர் சிவத்திரு சோமசுந்தரம் லிங்கேஸ்வரன் ஐயாவின் தலைமையில்  உதவிப் பிரதம பூசகர் சிவதொண்டர் தேவி உபாசகர், அலங்கார விபூசணம் கிரியாஜோதி சிவஸ்ரீ சோதிதாசன் அற்புதராஜா சர்மா ஐயா வும் இணைந்து மேற்கொள்ளவுள்ளனர்.