மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் சட்டங்கள், தேர்தல் விதிமுறைகள் தொடர்பிலான மீளாய்வு செயலமர்வு நடாத்தப்பட்டது.

 


 தேர்தல் ஆணைக்குழுவின் மூலோபாய வேலை திட்டத்தின் கீழ், நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் வேலை திட்டத்திற்கு அமைய,
மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் கண்காணிப்பில் ஈடுபடுகின்ற தேர்தல் கண்காணிப்பாளர்கள், அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் ஊடகவியாளர்களுக்கான
தேர்தல் சட்டங்கள், தேர்தல் விதிமுறைகள் தொடர்பிலான மீளாய்வு செயலமர்வு  நடாத்தப்பட்டது.
மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளர் எம்.பி.எம்.சுபியான் தலைமையில் இடம்பெற்ற மீளாய்வு செயலமர்வில், தேர்தல் அறிமுகம், தேர்தல்களில் பெண்களின் பிரதிநிதித்துவம்,
தேர்தல் சட்டங்கள் மற்றும் எல்லை நிர்ணய சட்டங்கள் தொடர்பிலான விளக்கவுரைகள் இடம்பெற்றன.