இலங்கை போக்குவரத்து சபை (SLTB) ஒப்பந்த அடிப்படையில் சாரதிகள் மற்றும் நடத்துனர்களை ஆட்சேர்ப்பு செய்வதாக அறிவித்துள்ளது!
நீங்கள் பொதுப் போக்குவரத்துத் துறையில் பணியாற்ற ஆர்வமாக இருந்தால், இது உங்களுக்கான அருமையான வாய்ப்பு!

தற்போதைய வெற்றிடங்கள்:
* சாரதி பதவி: 450 வெற்றிடங்கள் (ஆண்களுக்கு 425, பெண்களுக்கு 25)
* நடத்துனர் பதவி: 300 வெற்றிடங்கள் (ஆண்களுக்கு 275, பெண்களுக்கு 25)
முக்கிய தகவல்கள்:
* விண்ணப்பங்களுக்கான கடைசித் தேதி: ஜூலை 31, 2025
* விண்ணப்பிக்கும் பதவி மற்றும் சம்பந்தப்பட்ட மாகாணம் என்பன உறையின் மேல் இடது மூலையில் தெளிவாகக் குறிப்பிடப்பட வேண்டும்.
* நேர்முகப் பரீட்சையின் போது உங்களது அசல் பாடசாலை விடுப்புச் சான்றிதழ் (மாணவர் முன்னேற்ற அறிக்கை) மற்றும் பிற கல்விச் சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும்.
* முழுமையற்ற அல்லது விதிகளைப் பூர்த்தி செய்யாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என இலங்கை போக்குவரத்து சபை வலியுறுத்தியுள்ளது.
இந்த அறிய வாய்ப்பைத் தவறவிடாதீர்கள்! தகுதியான நபர்கள் உடனே விண்ணப்பியுங்கள்! உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடனும் இந்த தகவலைப் பகிர்ந்து கொள்ளுங்கள்!