லயன்ஸ் கழகத்தின் 52-வது (மட்டக்களப்பு மாவட்டம் 306 D10 ) charter anniversary celebration-- மட்டக்களப்பு கல்லடி GREENGARDEN-விடுதியில் இடம் பெற்றது .

 


 



  









































































மட்டக்களப்பு மாவட்டத்தில்  வெற்றிகரமாக இயங்கி வரும்  பழம்  பெரும் லயன்ஸ் கழகத்தின் 52-வது  (மட்டக்களப்பு  மாவட்டம் 306 D10 )   charter anniversary celebration--   மட்டக்களப்பு   கல்லடி     GREEN GARDEN விடுதியில் இடம் பெற்றது .

52nd    charter anniversary celebration ஆனது    லயன்ஸ் கழகத்தின் தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான V.  அழகரெட்ணம்  தலைமையில்  இடம் பெற்றது .
விழாவுக்கு பிரதம விருந்தினராக கழகத்தின்  அங்கத்தவரும்  புதிதாக ஆரம்பிக்கப்பட்ட லயன் மாவட்ட 306 D10   இன் ஆளுநர் கே. லோகேந்திரன்  கலந்து சிறப்பித்தார் . மேலும் இவ் நிகழ்வுக்கு  முதலாவது உப ஆளுநர் லயன் சாகிர் அகமட் வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது .

 வரவேற்பு நடனம் ஆரம்ப நிகழ்வாக இடம் பெற்றது. 

  இந்த நிகழ்வில்   charter chairman    ஆக   சிரேஷ்ட லயன் கழக உறுப்பினர் A.S.R தவராஜா  அவர்கள் சிறப்பாக   செயற்பட்டிருந்தார் .


மேலும் இந்த நிகழ்வுக்கு  HEAD TABLE இல்  லயன்ஸ் கழகத்தின் தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான V.  அழகரெட்ணம்,  ஆளுநர் கே. லோகேந்திரன்  , உப ஆளுநர் லயன் சாகிர் அகமட்,  charter chairman சிரேஷ்ட லயன் கழக உறுப்பினர் A.S.R தவராஜா,   மாவட்ட  அமைச்சரவை  பொருளாளர் லயன் T. குணராஜா மற்றும் லயன்ஸ்  கழக செயலாளர் சட்டத்தரணி   M.பகீரதன், பொருளாளர்  லயன் N. சிவகுமார் ஆகியோர் அமர்ந்து சிறப்பித்தனர்
 இவ் நிகழ்வுக்கு மட்டக்களப்பு   லயன்ஸ்  கழக அங்கத்தவர்கள் ,  மற்றும்  வேறு கழகங்களில் இருந்து வருகை தந்த  லயன் அங்கத்தவர்கள்  , லயன்  அங்கத்தவர்ளின்  குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர் 

இந்த கொண்டாட்டத்தில் சிறப்பு  அம்சமாக புதிதாக எமது கழகத்தில் இணைக்கப்பட்டவர்களை உள்வாங்குகின்ற நிகழ்வும் இடம் பெற்றது .
மேலும் மட்டக்களப்பு லயன்ஸ் கழகத்துக்கான  2025/2026ம் ஆண்டுக்குரிய CLUB DIRECTORY யும் வெளியிடப்பட்டது.

  கழகத்தின் 52 ஆண்டை சிறப்பிக்கும் முகமாக CHARTER கேக் வெட்டப்பட்டது .
அத்தோடு மிகவும் முக்கியமான அம்சமாக கழகத்தின் சிரேஷ்ட அங்கத்தவர்களாக லயன்  T. அருணா கிரிநாதன், லயன் பாஸ்கரன் ஆகியோர் பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர்  . மேலும்  306 D10 ஆளுநரால் சிறப்பாக செயற்பட்ட அங்கத்தவர்களுக்கு பரிசு பொதி வழங்கி பதக்கங்கள் அணிவித்து கௌரவிக்கப்பட்டனர் .