தேசிய மட்ட உடற்கண்காட்சி போட்டியில் மீண்டும் முதலிடம் – வின்சென்ட் மகளிர் உயர்தர பாடசாலை புதிய சாதனை!




மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் உயர்தர தேசிய பாடசாலை, பாடசாலை விளையாட்டு வரலாற்றில் மேலும் ஒரு பெருமைக்குரிய சாதனையைப் பதிவு செய்துள்ளது.

கடந்த 2024 ஆம் ஆண்டு பாடசாலை தேசிய மட்ட உடற்கண்காட்சி போட்டியில் முதலிடத்தைப் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்திருந்த வின்சென்ட் மகளிர் உயர்தர பாடசாலை, இம்முறையும் 2026 ஆம் ஆண்டுக்கான தேசிய மட்ட உடற்கண்காட்சி போட்டியில் முதலிடத்தைப் பெற்று தனது சாதனையை மீண்டும் நிலைநாட்டியுள்ளது.

இந்த வெற்றியின் சிறப்பம்சமாக, போட்டியில் 30 தங்கப் பதக்கங்களைப் பெற்று பாடசாலைக்கும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

அத்துடன், வின்சென்ட் மகளிர் உயர்தர பாடசாலை மாணவி செல்வி அஷாங்கினி, போட்டியில் சிறந்த தலைவிக்கான விருதையும் பெற்று தனக்கெனவும், பாடசாலைக்கெனவும் மேலும் ஒரு பெருமையைத் தேடித்தந்துள்ளார்.

மாணவிகளின் இந்த மாபெரும் வெற்றிக்குப் பின்னால் அர்ப்பணிப்புடன் பயிற்சியளித்த மட்/வின்சென்ட் மகளிர் உயர்தர பாடசாலை உடற்கல்வி ஆசிரியர் திருமதி S.P.E. தர்ஷன் அவர்களின் பங்களிப்பு பாராட்டுக்குரியது.

அதேவேளை, அவருக்கு உறுதுணையாக இருந்து மாணவிகளின் வெற்றிக்கு பங்களிப்பு வழங்கிய திரு. புருசோத்தமன் அவர்களுக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

தேசிய மட்டத்தில் தொடர்ச்சியாக முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டு, 30 தங்கப் பதக்கங்களுடன் புதிய சாதனை படைத்துள்ள வின்சென்ட் மகளிர் உயர்தர பாடசாலை மாணவிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!