இந்நிகழ்வின் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி. சி. கங்கேஸ்வரன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
விசேட அதிதிகளாக நிருவாக பிரதிக்கல்விப் பணிப்பாளர் திரு. P. திவிதரன், தொழிலதிபர் திரு. S. மங்களேஸ்வரன்(அபயம் அறக்கட்டளை), கல்வி அபிவிருத்தி பிரதிக்கல்விப் பணிப்பாளர் திருமதி. T. உதயகரன், தொழிலதிபர் திரு. V. யோகநாதன்( அபயம் அறக்கட்டளை) முகாமைத்துவப் பிரதிக்கல்விப் பணிப்பாளர் திரு. K. திருச்செல்வம், வைத்திய நிபுணர் திரு. K. பார்த்தீபன்(அபயம் அறக்கட்டளை), மற்றும் அபயம் அறக்கட்டளையின் கிழக்கு மாகாண இணைப்பாளர் வைத்தியர். T. தவநேசன் ஆகியோர் கலந்துசிறப்பித்தனர்.
சிறப்பு அதிதியாக வலுவூட்டப்பட்ட பாடசாலை மேம்பாட்டுத்திட்ட இணைப்பாளர் திரு. M. லச்சுதன் அவர்கள் கலந்துகொண்டார்.
கௌரவ அதிதிகளாக மண்முனை மேற்கு கோட்ட அதிபர்கள், மட்டக்களப்பு மேற்கு ஆசிரிய ஆலோசகர்கள், கிராம சேவை உத்தியோகத்தர் திரு. P. சிவநாதன், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு. N. சுபாஸ்கரன், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு. V. லோகேஸ்வரன், இளங்கதிர்கள் அபிவிருத்தி அமைப்பின் நிருவாக உத்தியோகத்தர் திரு. பயஸ் கிறிசாந்தன் மற்றும் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழுவின் செயலாளர் திரு. M. பற்குணம் ஆகியோர் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
மேலும், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழுவினர், பழைய மாணவர் சங்கத்தினர், ஆலயங்களின் பரிபாலன சபையினர், கிராம அபிவிருத்திச் சங்கங்கள், மாதர் கிராம அபிவிருத்திச் சங்கங்கள், விளையாட்டுக் கழகங்கள், இளைஞர் கழகங்கள் மற்றும் கடல்கடந்த குருந்தையூர் உறவுகள் அமைப்பினர் ,கடல்கடந்த நாக ஒளி உறவுகள் அமைப்பினர் ஆகியோரும் அழைப்பு அதிதிகளாகக் கலந்துகொண்டு நிகழ்வுக்கு மேலும் சிறப்பு சேர்த்தனர்.
கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் மற்றும் இணைப்பாடவிதானச்செயற்பாடுகள் அதிகூடிய மாணவர் வரவு, பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்கள் , கல்வியற் கல்லூரிக்கு தெரிவான மாணவன் ,சாதனை மாணவர்களின் பெற்றோர்கள், சாதனை ஆசிரியர்கள்,பாடசாலைக்கு காணியை நன்கொடையாக வழங்கியவர்,பாடசாலை ஆரம்பிப்பதற்கு உழைத்த பெருந்தகைகள்,பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழு செயலாளராக சேவை புரிந்தவர்கள் என 200 இற்கும் மேற்பட்ட சாதனையாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
இவ்வெழுச்சிமிக்க நிகழ்வானது பாடசாலைச் சமூகத்தினரின் ஒருங்கிணைந்த முயற்சியால் சிறப்பாக நடைபெற்றது.
.jpeg)

.jpeg)
.jpeg)








