சிவாநந்தா மைதானத்தில் பழைய மாணவர்களின் விளையாட்டு சங்கமம் - கோலாகலமாக நிறைவுற்றது 2026 போட்டிகள்!

 




 





























































































சிவாநந்த வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தினால் பழைய மாணவர்களுக்கிடையில் வருடம் தோறும் நடத்தப்படும்  வகுப்பு அடிப்படையிலான விளையாட்டு போட்டி 2026 கடந்த 19ம் மற்றும் 20ம் திகதிகளில் மிகவும் கோலாகலமாக சிவாநந்த வித்தியாலய மைதானத்தில் இடம்பெற்றது.
இதில் வகுப்பு அடிப்படையில் கலந்து கொண்ட அணிகள் விபரம் 
கிரிக்கெட் 32 அணிகள் - வெற்றியாளர்கள் 1ம் இடம் 2019ம் ஆண்டு உயர்தர வகுப்பு அணி 2ம் இடம் 2007ம் ஆண்டு அணி 
கரப்பந்து 8 அணிகள் - வெற்றியாளர்கள் 1ம் இடம் 2019ம் ஆண்டு உயர்தர வகுப்பு அணி 2ம் இடம் 2012ம் ஆண்டு உயர்தர வகுப்பு அணி 
கயிறு இழுத்த்தல் 8 அணிகள் - வெற்றியாளர்கள் 1ம் இடம் 2012ம் ஆண்டு உயர்தர வகுப்பு அணி 2ம் இடம் 2001ம் ஆண்டு உயர்தர வகுப்பு அணி 

கிரிக்கெட் போட்டியின் 
சிறந்த துடுப்பாட்ட வீரர் - சிவாநந்தியன் ஸ்ரீநாத் ( 2003 ஆண்டு உயர்தர வகுப்பு அணி)
சிறந்த களத்தடுப்பாளர் - சிவாநந்தியன் பிரதீஸ் ( 2019 ஆண்டு உயர்தர வகுப்பு அணி)
சுற்று போட்டி தொடர் நாயகன் - சிவாநந்தியன் டிலுஷன்  ( 2019 ஆண்டு உயர்தர வகுப்பு அணி)

கிரிக்கெட் போட்டியில் வெற்றிபெற்ற அணிக்கான வெற்றிக்கிண்ணம் மற்றும் அமரர் தனபாலன் ஞபாகார்த்த சுழற்சி முறையிலான வெற்றி கிண்ணமும் வழங்கப்பட்டது . அத்துடன் போட்டிகளில் வெற்றி பெற்ற அணிக்கான வெற்றி கிண்ணமும் பணபரிசில்களும் வழங்கிவைக்கப்ட்டது. 

கரப்பந்தாட்டம் 
சுற்று போட்டி தொடர் நாயகன் - சிவாநந்தியன் உஷாந்தன்   ( 2019 ஆண்டு உயர்தர வகுப்பு அணி)

பெறுமதி வாய்ந்த அணியாக - 1997 ஆண்டு உயர்தர வகுப்பும் 
சிறந்த  முன்னுதாரண அணியாக - 2003 ஆண்டு உயர்தர வகுப்பும்  தெரிவுசெய்யப்பட்டது 

இந்த போட்டியின் ஆரம்ப நிகழ்வில் ஆன்மிக  அதிதியாக மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் முகாமையாளர்  ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்த ஜி மகராஜ் அவர்கள் கலந்து கொண்டதுடன் இந்த நிகழ்வானது சிவாநந்த வித்தியாலய பழைய மாணவர் சங்க தலைவர் சிவாநந்தியன் தினேஷ்குமார் அவர்களின் தலைமயில் இடம்பெற்றது இதில் பிரதம விருந்தினராக சிவாநந்தியனும்  மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி சிவப்ரியா வில்வரெட்ணம் அவர்களும் சிறப்பு விருந்தினராக அதிபர் சிவாநந்தியன் தயாபரன் பிரதி அதிபர் இலங்கேஸ்வரன் முன்னாள் பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் சிவாநந்தியன் சந்திரகுமார் மற்றும் சிவாநந்தியன் மங்களேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர் விசேட அதிதிகளாக பிரித்தானிய பழைய மாணவர் சங்க நிர்வாக உறுப்பினர் சிவாநந்தியன் சுந்தரராஜா அவர்களும் KOV  நம்பிக்கை நிதியத்தின் சார்பில் திரு அதிஸ்டநாதன் அவர்களும் சபாபதிப்பிள்ளை உடையார் குடும்பத்தின் சார்பாக திருமதி. கோசலதேவி கிருபாகரன் கலந்து கொண்டிருந்தனர்.

மாலை நேர  பரிசளிப்பு நிகழ்வு சிவாநந்த வித்தியாலய பழைய மாணவர் சங்க முன்தேர்வு தலைவர் சிவாநந்தியன் பவானந்தராஜா அவர்களின் தலைமையில் இடம்பெற்றதுடன்  பிரதம விருந்தினராக சிவாநந்தியனும்  எந்திரியுமான K . மதிவண்ணண் - மோட்டார் வாகனப் பிரதான பரிசோதகர், மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம், சிறப்பு அழைப்பு விருந்தினராக பிரபல ஊடகவியலாளர் திரு A.R .V லோஷன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக 
சிவாநந்தியன் S. ரவீந்திரன் - பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் 
சிவாநந்தியன் K. கருணேஸ்வரன் - தலைவர், கல்லடி உப்போடை , நொச்சிமுனை சித்திவிநாயகர் பேச்சியம்மன் ஆலயம் 
திரு . T. ஜெகன் - தலைவர் சிவாநந்த விளையாட்டு கழகம் 

விசேட அதிதிகளாக் 
சிவாநந்தியன் J.  ஜெசிதரன் - 1993 ஆண்டு உயர்தர வகுப்பு சார்பாக 
சிவாநந்தியன் S . சுரேஷ்கரமூர்த்தி - 1997 ஆண்டு உயர்தர வகுப்பு சார்பாக 
சிவாநந்தியன் Y.  சுரேஷ்குமார் - 2001 ஆண்டு உயர்தர வகுப்பு சார்பாக 
சிவாநந்தியன் R.  அரவிந்தன் - 2002 ஆண்டு உயர்தர வகுப்பு சார்பாக 
சிவாநந்தியன் K . கோமகன் - 2003 ஆண்டு உயர்தர வகுப்பு சார்பாக 

சார்பாக கலந்துகொண்டிருந்தனர்