மட் /மட்/ நவரத்தின ராசா வித்யாலயதின் அதிபர் திரு மு. சதீஷ்குமார் தலைமையில் வித்யாலயத்தில் புதிய கட்டிடத் திறப்பு விழாவானது 18.09.2026 வெள்ளிக்கிழமை அன்று பிற்பகல்2.00 மணிக்கு இடம் பெற்றது
இதில் கிழக்கு மாகாணத்தின் ஆளுநர் கௌரவ. கலாநிதி. ஜெயந்தலால் ரட்ணசேகர பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்ததுடன் அவரால் புதிய கட்டிடமானது திறந்து வைக்கப்பட்டது இந்நிகழ்வில் மட்டக்களப்பு வலயக் கல்வி பணிப்பாளர் திரு.தினகரன் ரவி அவர்களும் பிரதி கல்வி பணிப்பாளர் (கல்வி அபிவிருத்தி) திரு. என். குகதாசன் அவர்களும் கோட்டக்கல்வி பணிப்பாளர் திரு.எஸ் தில்லைநாதன் அவர்களும் சக பாடசாலை அதிபர்களும் கட்சி பிரமுகர்களும் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் மற்றும் பாடசாலையின் நலன் விரும்பிகள் அனைவரும் கலந்து சிறப்பித்திருந்ததுடன் இந்நிகழ்வானது பாடசாலையின் வரலாற்றில் ஒரு முக்கிய மைக்கல் ஆக அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
01.01.1997 இல் ஆரம்பிக்கப்பட்ட இப் பாடசாலையில் இதுவரை மூன்று வகுப்பறைகளை கொண்ட ஒரு நிரந்தர கட்டிடமே காணப்பட்டதுடன் ஏறத்தாழ 29 ஆண்டுகளின் பின்னர் பாடசாலையின் கட்டிட தேவையானது 04.10.2025ல் பாடசாலையில் இடம் பெற்ற சிறுவர் தினம் மற்றும் பரிசளிப்பு விழாவில் பங்கு கொண்ட வலய கல்வி பணிப்பாளரிடம் அதிபர் திரு.மு. சதீஷ்குமார் அவர்களினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு இணங்க 2026 ஆம் ஆண்டுக்கான மாகாண பாடசாலைகளுக்கான அபிவிருத்தி நிதியில் இருந்து இக்கட்டிடமானது நிர்மாணிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டது. இது பாடசாலை சமூகத்திற்கும் ஆரையம்பதி கிழக்கு வாழ் மக்களுக்கும் மட்டற்ற மகிழ்ச்சியை அளித்த ஒரு நிகழ்வாக நடந்தது குறிப்பிடத்தக்கதாகும்.


.jpg)
.jpg)
.jpg)








