மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக பிரிவின் அத்தம' தேசிய தூய்மை தின நிகழ்ச்சி - இரண்டாம் வேலைத்திட்டம்-






















நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் "அத்தம" தேசிய தூய்மை தின நிகழ்ச்சித்திட்டத்தின் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக பிரிவின் இரண்டாம் வேலைத்திட்டமானது களுவாஞ்சிகுடி வடக்கு திண்மக் கழிவு முகாமைத்துவ நிலையத்துக்கு அருகாமையில் பிரதேச செயலாளர் உ. உதயஸ்ரீதர் அவர்களின் வழிகாட்டுதலில், உதவி பிரதேச செயலாளர் திருமதி. சத்யகெளரி தரணிதரன் அவர்களின் தலைமையில் இன்று (2026.09.19) காலை 8 மணியளவில் ஆரம்பமானது. 'கிளீன் ஸ்ரீலங்கா ' தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் "தூய்மையான தேசத்திற்கான தேசிய மக்கள் பணி" எனும் தொனிப் பொருளை முன்னிறுத்தி தன்னார்வ மக்கள் பங்கேற்பின் முலம் தனியார் மற்றும் மக்கள் கூட்டாண்மை எண்ணர்கருவின் அடிப்படையில் 'அத்தம' தேசிய தூய்மை தின நிகழ்ச்சி திட்டமானது நாடளாவிய ரீதியில் செயற்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இதன் போது களுவாஞ்சிகுடி கடற்கரை பிரதேசத்தை அண்டிய பகுதியை துப்பரவு செய்து பொதுமக்கள் பொழுதுபோக்கு பிரதேசமாக மாற்றும் வகையில் சிரமதான நிகழ்வு இடம் பெற்றது. இவ் தேசிய நிகழ்வில் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் செ. பிரபாகரன், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கீளின் ஸ்ரீ லங்கா பிரதிநிதிகள், முப்படையினர், பிரதேச பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்த தேசிய வேலைத்திட்டமானது மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக பிரிவின் 45 கிராம சேவகர் பிரிவுகளிலும் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.