ஆரையூர் அருளம்பலத்தின் பன்முக ஆளுமையும் சிறப்புகளும் ஒரு பார்வை .

 


 

-ஈ.சந்திரகுமார்
 

கிழக்கிலங்கையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழ்ந்து
கொண்டிருக்கும் ஆரையூர் அருளம்பலம் அவர்கள், தமது வாழ்நாள் முழுவதையும் பிரதேசத்தின் கலை பண்பாட்டு வளர்ச்சிக்கு அர்ப்பணித்தவர். இவர் தமது சிறுவயதிலேயே தமக்கான கலைப் பயணத்தைத் தொடங்கியவர். தமது பிரதேச வாழ்வியலினூடாக, கூத்துக் கலையினூடாக, சடங்கி னூடாக தம் கலைப்பணியை முன்னெடுத்தவர். அருளம்பலம் அவர்கள் பாடசாலையின் அதிபராக் கடமையாற்றி, சமூ கத்தின் தேவைக்கேற்ப இயங்கி வருபவர். படைப்பாற்றலும் ஆக்கத்திறனும் நிறைந்த இவர், சமூக நலனுக்காகவும் கலைக்காகவும் தம் படைப்புகளை ஆக்கியளித்தவர். இந்நி லையில் அவரது அயராத கலை வழிப்பணிகளுக்கு வழங்கப் பட்ட விருதுகள், பட்டங்கள், பாராட்டுக்கள், கௌரவிப்புக்கள் எண்ணிலடங்காதவையாகும். 'ஆரையூர் அருளர்' எனும் புனைபெயரில் தனது கலை. இலக்கியப் பயணத்தை வெவ்வேறு துறைகளில் முன்னெடுத்தவர். சமூகம், பொருளா தாரம், சமகால அரசியல் போக்குகள் முதலியவற்றை சிறு கதைகள், கட்டுரைகள், கவிதைகள், வில்லுப்பாட்டு, நாட கங்கள் என வெவ்வேறு தளங்களில் வெளியிட்டவர். அத்துடன், மட்டக்களப்பின் கூத்தரங்க மரபிலும் தனது இடையறாத பணியினை ஆற்றி வருபவர். வடமோடி கூத்து, தென்மோடி கூத்து, வசந்தன் கூத்து, சமூகக் கூத்து போன்ற கூத்து வடிவங்களைத் தம் புலமைத்துவத்தைப் பயன்படுத்தி எழுதி, ஊருக்குள் உள்ள அண்ணாவிமாருடன் இணைந்து அவற்றைப் பயிற்றுவித்தும் வந்தவர் . கூத்தரங்கின் ஆட்ட, தாளங்கள், கதைக் கட்டமைப்புகள், பாத்திர வார்ப்புகள் முதலானவற்றைச் செவ்வனே தமது எழுத்துகளில் பிரயோகித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறையினரின் பாரம் பரிய அரங்கவிழா மாமாங்கத்தில் நடைபெற்ற பொழுது ஜூலை 31, 2024 அன்று ஆற்றுகை செய்யப்பட்ட 'இறைவனும் புலவனும்' எனும் தென்மோடிக் கூத்து இவரால்  எழுதப் பட்டது.
படைப்பாற்றலும் செயற்றிறனும் நிறையப் பெற்ற ஆரையூராருக்கு பல விருதுகளும் கௌரவிப்புகளும் வந்து குவிந் துள்ளன. வாழும் பொழுது ஓர் ஆளுமையை வாழ்த்துவதும், பாராட்டுவதும் அவரது வாழ்நாளை அதிகரிப்பதோடு, அவரைப் போல் மற்றவர்களும் உருவாகுவதற்கும் வழிப்ப டுத்தும். காலத்திற்குக் காலம் தமது எழுத்துப்பணிக்காகவும் சமூகப்பணிக்காவும் கலைப்பணிக்காகவும் பல வழிகளிலும், பல நிலைகளிலும், பல விழாக்களிலும் அரசுசார்ந்த, அரசுசாரா நிறுவனங்கள், ஊரின் கலைக்கழகங்கள்  ஊடாகவும்  விருதுகள், பாராட்டுகள், கௌரவிப்புகளைப் பெற் றுள்ளார். ஒரு கலைஞரின் சமூகப் பணிக்கு, சேவைக்குக் கொடுக்கும் மதிப்பும் சிறப்பும் பாராட்டும் அவரை மேலும் ஊக்கப்படுத்தும். ஆரையூர் அருளம்பலத்திற்குக் கிடைத்த பட்டங்களும் விருதுகளும் அவரின் சேவையை எமக்கு ணர்த்தி நிற்கின்றன. 1997-ஆம் ஆண்டு அரச அதிபரால் கொடுக்கப்பட்ட சிறந்த 'கூத்துக்கலைஞர்' விருது தொடங்கி 2023-ஆம் ஆண்டில் அனாமிகா பண்பாட்டு மையத்தால் கொடுக்கப்பட்ட 'தலைக்கோல்' விருது ஈறாக ஒவ்வொரு வருடமும் தொடர்ச்சியாக ஏதோ ஒரு வகையில் அவரது திற மைக்குப் பட்டங்களும் விருதுகளும் கிடைத்தே வந்துள்ளன. ஆரையூர் அருளம்பலம் அவர்கள் ஒரே ஆண்டில் அதிகமான விருதுகளையும் பெற்றுள்ளார். 2009, 2014, 2019, 2023 ஆண்டுகளை இதற்கு உதாரணமாகக் கூறலாம். இதில் அர சாங்கத்தினால் தேசிய ரீதியாக வழங்கப்படும் 'கீர்த்திஸ்ரீ" விருது(2009), 'கலாபூசணம்' விருது(2010) ஆகியனவும் உள் ளடங்கும். இவ்விருதுகள் அரசினால் வழங்கப்படும் முதன்மை விருதுகளாகும்.


 
இவருக்கு கலாசார அமைச்சால் தேசிய கலைஞர் விருது 2019-ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. உள்ளூர் மட்டம் தொடங்கி: பிரதேச, மாவட்ட, மாகாண, தேசிய ரீதியாகவும் விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்றவராக ஆரையூர் அருளம்பலம் திகழ்கின்றார். இவரது விருதுகளின் வகை களைப் பார்க்க உண்மையிலேயே மகிழ்ச்சியளிக்கின்றது. கலைஞர், கலைச்செம்மல், கவியரசர், பல்கலைமாணி, கலைமுத்து, பல்கலைவித்தகர், இலக்கிய வேந்தர், மரபுக் கலை மன்னன் போன்ற குறிப்பிடத்தக்க பட்டங்களையும் இவர் பெற்றிருந்தமையும் இவ்விடத்தில் நினைவுகூரத் தக்கது. இதனை நோக்கும் பொழுது, அருளம்பலம் கலையால் வாழ்த்தப்படும் ஒருவராக வெளிப்படுகின்றார். சமூக சேவைக் காக இறைஞான தேசிகர், இறைகவிமாமணி, சமூக தீபம், செம் மொழிப் புலவர் ஆகிய பட்டங்களும் இவருக்கு கிடைத்துள்ளன.
பட்டங்களும் விருதுகளும்: 

1997 - கூத்து கலைஞர்
(முன்னாள் அரசாங்க அதிபர் திரு. சண்முகம்)

 1997 - அண்ணாவியார்
(மண்முனைப் பற்று சாகித்திய விழா )
2002 - நாட்டுக் கூத்து கலைஞர்
(முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு. ஜோசப்பரராஜசிங்கம்
2004 - சமாதான நீதவான்
(நீதி அமைச்சர்)
2009 - கீர்த்திஸ்ரீ தேசிய விருது
(முன்னாள் பிரதி நீதி அமைச்சர் புத்திரசிகாமணி) 

2009 - கலைஞர் கௌரவிப்பு
(மண்முனைப் பற்று பிரதேச கலாச்சார பேரவை)

 2009 கலைஞானி
(ஆரையம்பதி மகாவித்தியாலய நட்புறவு குழு)

 2010 - முதலமைச்சர் விருது
(கிழக்கு மாகாண சபை - முதலமைச்சர்) 

2010 - கலாபூசணம் தேசிய விருது
(இந்து கலாச்சார அலுவல்கள் திணைக்களம்)
2011 - இறைஞான தேசிகர்
(நாவற்குடா ஸ்ரீ முத்துமாரியம்மன் அறங்காவலர் சபை) 

2012 - சாதனையாளர் விருது
(ஆரையம்பதி சமூக அபிவிருத்தி சபை)
2013 - இறைகவிமாமணி
(ஆரையம்பதி வடபத்திர காளியம்மாள் நிர்வாக சபை) 

2013 - கலைச் செம்மல்
(மட்டக்களப்பு மாவட்ட கலாசாரப் பேரவை) 

2014- பல்கலைமாமணி
(கல்லடி உப்போடை நொச்சிமுனை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம், ஸ்ரீ பேச்சியம்மாள் ஆலய நிர்வாகிகள்)

 2014 - கவியரசர்
(புல்லுமலை நாக கன்னியம்பாள் ஆலய நிர்வாக சபை) 

2015 - திறமைக்கான தேடல் விருது, 'கிராமத்து உள்ளங்கள்' (லக்டோ மீடியா நெட்வெர்க் ஸ்ரீலங்கா)
2015 சமூக தீபம்
(ஒற்றுமைக்கான உறவு பாலம்)
.
2015 - செம்மொழிப் புலவர்
(முனைக்காடு நாகலிங்கேஸ்வரர் ஆலய பரிபாலன சபை) 

2017 - இலக்கிய விருது
(கிழக்கு மாகாணம் - இறையின்பப் பாவாரம்
2017 - இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் கலைஞர் விருது 

2018 - கலை முத்து கலைதீபம் பட்டமும் தேசாபிமானி விருதும் (லக்டோ மீடியா)
2018 - சாமஸ்ரீ தேசாபிமானி விருது (அகில இன நல்லுறவு ஒன்றியம்) 

2019- பல்கலைவித்தவர் (ஆர்.கே.மீடியா, இலங்கை)
2019 - இலக்கிய வேந்தர் (ஒற்றுமைக்கான உறவு பாலம்) 

2019 - தேசிய கலைஞர் (கலாசார அமைச்சு)
2020 - மரபுக்கலை மன்னன்
(கலாசார பண்பாட்டு அலுவல்கள் அமைச்சு)

 2021 வில்லிசை வித்தகர்
(நாகசக்தி கலா மன்றம்)
2021 - தேனக தீபம், அறிவுப் பொக்கிசம் (லக்டோ மீடியா)
2022 கலை அருவி
('அ' கலையரங்கம்)
2022 - வில்லுடிப்பாட்டு
 - கிழக்கு மாகாண இலக்கிய விருது'

' 2023 கலைப்பாவரசு (லக்டோ மீடியா)
2023 - வீசுதென்றல் வீசுது (தென்றல் சஞ்சிகை குழு) 

2023 - 'தலைக்கோல்' விருது (அனாமிகா பண்பாட்டு மையம்)


ஆரையூர் அருளம்பலத்திற்குக் கிடைத்த பாராட்டுகளும் கௌரவிப்புகளும் அவரது கலைச்சேவைக்கு கிடைத்த அங் கீகாரங்களாகும். கலை, இலக்கியச்செயற்பாட்டாளருக்குக் கொடுக்கவேண்டிய 'புகழ்ச்சியையும் மரியாதையையும்’ மக்கள் அவருக்கு கொடுக்க வேண்டிய முறையில் கொடுத்து அவரைக் கௌரவப்படுத்தி உள்ளனர்.

 கலைஞரை அவர் வாழும் காலத்திலேயே வாழ்த்திக் கௌரவிப்பது சிறப் பானது. கலைஞர் ஒருவருக்கு கொடுக்கும் பாராட்டுக்களும் கௌரவிப்புக்களும் அவரை புத்துணர்சியுடன் மீள இயங்கச் செய்கின்றன. அவரை மீளமீள புதிது புதிதாகப் பிறக்க வைத்து, புதிதாகக் கலைகளையும் படைக்கச் செய்கின்றன. ஆரையூர் அருளம்பலத்தின் கலை, இலக்கிய, சமூகப் பணிகள் காலத்தால் அழியாதவை. அவர் தன் படைப்பாக்க முறைமையாலும் வினைத்திறனாலும் தனது படைப்பாக்க வெளியை அகலப்படுத்தியுள்ளார். அதுவே அவரைக் கலை ஞராக என்றைக்கும் நிலைகொள்ளச் செய்கிறது.