மட்டக்களப்பு இருதயபுரம் புனித வின்சன்ட் டி பவுல் பாலர் பாடசாலையின் வருடாந்திர விளையாட்டு விழாவும் பரிசளிப்பு நிகழ்வும் 14.07.2025 மற்றும் 15.07.2025 ஆகிய இருதினங்கள் திரு.இருதயநாதர் ஆலய முன்றலிலும் ஆலய மண்டபத்திலும் இடம்பெற்றது.
திருஇருதயநாதர் ஆலயப் பங்குத் தந்தையும், புனித வின்சன்ட் டி பவுல் பாலர் பாடசாலை நிர்வாகப் பொறுப்பாளருமான அருட்பணி கிளமென்ட் வி.அன்னதாஸ் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில், மட்டக்களப்பு கல்வி வலய முன்பள்ளி உதவிக் கல்விப் பணிப்பாளர் அனுரேகா விவேகானந்தன் பிரதம அதிதியாகவும், மிசனறி அருட்சகோதரிகள், மண்முனை வடக்குப் பிரதேச செயலக முன்பள்ளி அபிவிருத்தி உத்தியோகத்தர் திருச்செல்வம் மேகராஜ் ஆகியோர் சிறப்பு அதிதிகளாகவும் வின்சன்ட் டி பவுல் பாலர் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் எனப்பலர் கலந்துகொண்டனர்.
இரு நாட்கள் இடம்பெற்ற நிகழ்வில் முதல் நாள் மாணவர்களுக்கான விளையாட்டுக்களும் இரண்டாம் நாள் வினோத உடைப் போட்டியும் பரிசளிப்பு நிகழ்வும் இடம்பெற்றது.