பாழடைந்த வீடொன்றில் இருந்து 04 வயதுடைய சிறுமியின் சடலமொன்றும் ஆண் ஒருவரின் சடலம் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது .

 


சீதுவ, ரத்தொலுகம, சாம மாவத்தை பிரதேசத்தில் பாழடைந்த வீடொன்றில் இருந்து 04 வயதுடைய சிறுமியின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

அதே இடத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் 45 வயதான ஆண் ஒருவரின் சடலமும் மீட்கப்பட்டுள்ளது.


தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட நபர், உயிரிழந்த சிறுமியின் தந்தையின் சகோதரன் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், சிறுமி இறந்த விதம் தொடர்பில் இதுவரை தகவல் ஏதும் வௌியாகவில்லை.