மட்டக்களப்பு கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் 50வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஊடக சந்திப்பு





மட்டக்களப்பு கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் 50வது ஆண்டு நிறைவை முன்னிட்டு  ஊடக சந்திப்பு  கழக தலைவர் பேரின்பராஜா சடாட்சர ராஜா தலைமையில்  கல்லடி தனியார் விடுதியில் இன்று (01) இடம் பெற்றது.

கோட்டை முனை   விளையாட்டுக் கழக 50 வது வருடத்தை முன்னிட்டு நடாத்தப்பட விருக்கும் நிகழ்வுகள் பற்றி அறிவிக்கப்பட்டது.

 இதனைத்தொடர்ந்து கழகத்திற்கான பாடல்  வெளியிடப்பட்டதுடன் ஞாபகார்த்த  டி செர்ட் மற்றும் தொப்பிகள் வழங்கப்பட்டதோடு   , விளையாட்டு கழக பிரதானிகளுக்கு   ஆயுட்கால அடையாள அட்டைகளும்  வினியோகிக்கப்பட்டன .
 புது பொலிவுடன் இணையதளம்  ஆங்கில மொழியில் அதிதிகளினால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

மிக முக்கியமாக மட்டக்களப்பு மாவட்டத்திற்கு முதல் தடவையாக பிரித்தானியாவின் கிரிக்கெட் தரம் இரண்டினை நிறைவு செய்த  பயிற்றுவிப்பாளர் மலிந்த சுரபுலிக்கே கோட்டை முனை விளையாட்டுக்கழகத்தினால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.

எமது பிரதேசத்தில் உள்ள இளைஞர்களை சிறந்த கிரிக்கட் வீரர்களாக  மாற்றுவதற்கும் அவர்களை தேசிய கிரிக்கட் நீரோட்டத்தில் இணைப்பதற்கும் இவ் கழகம் சிறப்பாக செயற்பட்டு வருகின்றது.

வட கிழக்கு மாகாணத்தில் புற்தரையிலான கிரிக்கட் மைதானம் கோட்ட முனை விளையாட்டுக் கிராமத்தில் அமைந்துள்ளது என்பது  குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் கோட்ட முனை விளையாட்டுக் கழக பணிப்பாளர்களான எஸ்.ரஞ்சன், எஸ்.காசிப்பிள்ளை, ஏ.சிவநாதன், செயலாளர் பா. ஜெயதாசன், பொருளாளர் கே .தயா சிங்கம், உபதலைவர் எஸ்.தங்கராஜா மற்றும் கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.