(ஆர்.நிரோசன்)
மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் 2023 ஆம் ஆண்டுக்கான இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி நேற்று(31) வெள்ளிக்கிழமை மாலை 3.30 மணியளவில் இடம்பெற்றது.
இப்போட்டியானது மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் அதிபர் ஆர்.பாஸ்கர் தலைமையில் இடம் பெற்றது மற்றும் புளியந்தீவு மெதடிஸ் தேவாலயே தலைமை போதகர் ஏ.சேம் சபேந்திரன் அவர்களின் இறை பிரார்த்தனையுடன் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டன. 
இவ் இல்ல விளையாட்டுப் போட்டியில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி சிவகுமார் குலேந்திரகுமார்,
கௌரவ அதிதிகளாக 
மட்டக்களப்பு சுகாதார பிரதிப்பிராந்திய பணிப்பாளர் கலாநிதி: ஆர்.நவலோகிதன், மட்டக்களப்பு வலயக்கல்வி விளையாட்டிற்கான 
உதவி உடற்கல்விப் பணிப்பாளர் 
வி.லவக்குமார், 
மாவட்ட விளையாட்டுப் உத்தியோகஸ்தர் திரு. வி ஈஸ்வரன் 
மாவட்ட வன உதவிப்பணிப்பாளர் 
திரு:என்.ஜெயச்சந்திரன் ஆகியோர் அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர். 
இவ் விளையாட்டு போட்டியின் முடிவில் காட்மன் இல்லம் 389 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தையும்,
சோமநாதர் இல்லம் 383புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தையும்,
ஓல்ட் இல்லம் 337 புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்தையும்,
கோல்டன் இல்லம் 304 புள்ளிகளைப் பெற்று நான்காவது இடத்தையும் 
பெற்றுக் கொண்டன.
இப்போட்டிகளில் இடம் பெற்ற ஆயுதங்களை ஏந்திய
வண்ணமான அணிநடை, உடற்பயிற்சிக் கண்காட்சி, பேண்ட் வாத்தியம் ஆகியன அனைவரதும் கவனத்தை ஈர்த்ததுடன் இதன் போது, பாடசாலையின் ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்களும், பாடசாலையின் பழைய மாணவிகள், மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கொண்டு சிறப்பித்தனர்.
 



.jpeg)


.jpeg)








 
 




 
 
 
 
.jpeg) 
.jpeg)