தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு தொகுதிக்கான தேர்தல் பிரசாரக்கூட்டம் அமெரிக்கமிசன் மண்டபத்தில் நடைபெற்றது.

 


இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு தொகுதிக்கான தேர்தல் பிரசாரக்கூட்டம்  மட்டக்களப்பு அமெரிக்கமிசன் மண்டபத்தில் நடைபெற்றது.
இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு தொகுதி கிளையின் ஏற்பாட்டில் நடைபெற்ற கூட்டத்தில், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்,
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன்,ஞா.சிறிநேசன்,சீ.யோகேஸ்வரன்,கி.துரைராஜசிங்கம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பு தொகுதியில் உள்ள உள்ளுராட்சிமன்றங்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் இதன்போது அறிமுகம் செய்துவைக்கப்பட்டனர்.