மட்டக்களப்பு வாழைச்சேனையில் ‘ஏழைகளின் பெலன்’; அறக்கட்டளை அமைப்பின் அங்குரார்ப்பனமும் புதுக்குடியிருப்பு கிராமத்திற்கான உணவு வங்கியின் செயல்திட்டமும் வைப ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
வாழைச்சேனை அசம்பிளி ஓப் கோட் தேவாலயத்தில் வணக்கத்திற்குரிய போதகர்
லக்ஷ்மணகாந்தன் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் கோறளைப்பற்று பிரதேச
சபை தவிசாளர் ஷோபா ஜெயரஞ்சித் பிரதேச செயலாளர்
ஜெயானந்தி திருச்செல்வம் கிராம சேவகர்களான பிரபு,வரதராஜன் ஆகியோர்கள் அதிதிகளாக கலந்து கொண்டனர்.
நிகழ்வானது மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாகியதுடன் ‘ஏழைகளின் பெலன் ‘
அறக்கட்டளை என பெயர் பொறிக்கப்பட்ட பெயர் பலகை அதிதிகளினால் திரை நீக்கம்
செய்யப்பட்டது.
போதகர் லக்ஷ்மணன் தலைமை உரையாற்றினார்.
அவர் தமது
உரையில் தேவ சபையில் உள்ள உறுப்பினர்களின் நிதி பங்களிப்பின் மூலம் இவ்
அறக்கட்டளை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாகவும் ‘துன்பப்படுகின்ற
யாவருக்கும் ஆறுதல் செய்யுங்கள்’ என்ற தேவ வசனத்திற்கேற்ப குறித்த அறப்பணி
மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
எதிர்காலத்தில் கோறளை வடக்கு வாகரை.கோறளை தெற்கு கிரான் போன்ற இடங்களுக்கும் விஸ்த்தரிக்கப்படும் என்றார்.இன்றைய நாள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட தெரிவு செய்யப்பட்ட பயணாளிகளுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட இவ் அறக்கட்டளை அமைப்பானது பிரதேசத்தில் சுமார் 100 குடும்பங்களுக்கு வாழ்வாதர உதவிகளை வழங்கியுள்ளது.அத்துடன் மாதாந்தம் 30 வறிய குடும்பங்களுக்கு உலர்வு உணவு வழங்கல் என்ற செயல்திட்டத்தின் அடிப்படையில் செயல்பட்டு வருகின்றது.நிகழ்வில் அதிதிகள் உரையாற்றியதுடன் அதிகளுக்கு நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் சிறுவர்களின் கலை நிகழ்சிகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.





