மட்டக்களப்பு, ஆரையம்பதி - 03 இல் வீற்றிருக்கும் கிழக்கிலங்கையில் சிறப்புமிக்க அருள்மிகு வெள்ளை மணல் ஸ்ரீ அரசடிப்பிள்ளையார் ஆலயத்தின் 2026ஆம் ஆண்டிற்கான வருடாந்த அலங்கார உற்சவ பெருவிழா எதிர்வரும் செப்டம்பர் 10ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. 09.09.2026 (புதன்கிழமை) விநாயகர் வழிபாடு 10.09.2026 (வியாழக்கிழமை) 01ஆம் நாள் கொடியேற்றத் திருவிழா நண்பகல் 12.00 மணிக்கு இடம் பெறும் 11.09.2026 (வெள்ளிக்கிழமை)02ஆம் நாள் கற்பூரச்சட்டித் திருவிழா 12.09.2026 (சனிக்கிழமை) 03ஆம் நாள் திருவிழா – புஷ்பாஞ்சலித் திருவிழா. 13.09.2026 (ஞாயிற்றுக்கிழமை)04ஆம் நாள் – தேரோட்டத் திருவிழா (மாலை 5.30 மணிக்கு விஷேட அபிஷேகங்கள் இடம் பெற்று 6.30 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் வெளி வீதியுலா வருதல் இடம் பெறும் 14.09.2026 (திங்கள்கிழமை) 05ஆம் நாள் காலை 7:30 மணிக்கு 108 சங்காபிஷேகம் இடம்பெற்று 9.00 மணிக்கு தீர்த்த திருவிழா இடம்பெற்று அன்னதான வைபவத்தினை தொடர்ந்து இரவு 7.00 மணிக்கு திருப்பொன்னூஞ்சல் திருவிழா நடைபெறும் 15.09.2026 (செவ்வாய்க்கிழமை) வைரவர் பூஜை இடம்பெறும். இத் திருவிழா நிகழ்வுகள் அனைத்திலும் பக்த கோடி பெருமக்கள் கலந்துகொண்டு எம்பெருமானின் அருள் பெற்றுச் செல்க!

.jpeg)




