இந்துக்களின் மிக முக்கிய விரதங்களில் ஒன்றாக கருதப்படும் கந்தசஸ்டி விரதம் இன்று அனுஸ்டிக்கப்படுகின்றது.
ஈழத்து திருச்செந்தூர் எனப்போற்றப்படும் மட்டக்களப்பு,திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் இன்று கந்தசஸ்டி விரதம் ஆரம்பமானது.
இன்றைய தினம் விசேட யாகம் மற்றும் அபிசேகம் நடைபெற்றதை தொடர்ந்து கந்தசஸ்டி விரதம் ஆரம்பமானது.
இன்றைய
தினம் முருகப்பெருமானுக்கு விசேட பூஜைகள் நடைபெற்றதுடன் கந்தசஸ்டி
விரதத்திற்கான கும்பம் வைக்கப்பட்டு விசேட பூஜைகள் நடைபெற்றன.
இதன்போது நற்சிந்தனைகள் வழங்கப்பட்டதுடன் கந்தபுராண படலம் பாடும் நிகழ்வும் நடைபெற்றது.
எதிர்வரும் 30ஆம் திகதி சூரன்போர் நடைபெறவுள்ளதுடன் 31ஆம் திகதி காலை கும்பம் சொரிதலுடன் விரதம் நிறைவுபெறவுள்ளது





