திராய்மடு நாவலடி நாமகள் வித்தியாலத்தில் ஓசியன் ஸ்டார் லங்கா அமைப்பின் ஊடாக மாணவர்களுக்கான திறன் விருத்தி பயிற்சி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

 


மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட திராய்மடு நாவலடி நாமகள் வித்தியாலத்தில் ஓசியன் ஸ்டார் லங்கா அமைப்பின் ஊடாக மாணவர்களுக்கான திறன் விருத்தி பயிற்சி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

பிரித்தானியாவினை தளமாக கொண்டு இயங்கும் ஓசியன் ஸ்டார் நிதியத்தின் இலங்கைக்கான பிரிவான ஓசியன் ஸ்டார் லங்கா அமைப்பின் ஊடாக இந்த பயிற்சிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
பாடசாலையின் பிரதி அதிபர் அ.கோகுலன் தலைமையில் நடைபெற்ற ஆரம்ப நிகழ்வில் ஓசியன் ஸ்டார் லங்கா அமைப்பின் முகாமைத்துவ பணிப்பாளர் டிலானி பாண்டர்,பிரதிப்பணிப்பாளர் சாளினி பத்மராஜா, பிரித்தானியாவில் ஓசியன் ஸ்டார் நிதியத்தின் கத்லொக் பாக் பாடசாலையின் பயிற்றுவிப்பாளர்களான ரொஸ்வோக்கர்,சார்ளன்,வொன்டி ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இதன்போது அதிதிகள் பாண்ட் வாத்தியங்களுடன் வரவேற்பளிக்கப்பட்டதுடன் ஆரம்ப நிகழ்வுகள் நடைபெற்றன.
சித்திரம்,கைவினைப்பயிற்சி,நடனம்,பாடல் மற்றும் இசை போன்ற பல்வேறு பயிற்சிகளை இன்று மாணவர்களுக்கு வழங்கும் வகையில் இந்த பயிற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஓசியன் ஸ்டார் லங்கா அமைப்பின் ஊடாக மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள மிகவும் பின்தங்கிய வறிய மாணவர்கள் உள்ள பாடசாலைகள் தெரிவுசெய்யப்பட்டு இவ்வாறான பயிற்சிகள் தொடர்ச்சியாக மாணவர்களுக்கு வழங்கப்பட்டுவருகின்றன.