இவ்வருடம் உயர்தரப் பரீட்சைக்கு முகம்கொடுக்கும் பிள்ளைகள் வரலாற்றில் பாரிய சவால்களை எதிர்கொண்டவர்கள் .

 


உயர்தரப் பரீட்சையை பிற்போடுமாறு உச்ச நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில  தெரிவித்துள்ளார்.

பரீட்சையை ஒத்திவைக்கும் போராட்டத்தை தாம் முன்னெடுப்பதால், பிள்ளைகளின் தலையில் சுமத்தப்பட்டுள்ள சுமையை தனது தலையில் ஏற்றி, பிள்ளைகள் பரீட்சைக்குத் தயாராவதற்கு நேரத்தைச் செலவிட வேண்டுமென கம்மன்பில தெரிவித்தார்.

இவ்வருடம் உயர்தரப் பரீட்சைக்கு முகம்கொடுக்கும் பிள்ளைகள் வரலாற்றில் பாரிய சவால்களை எதிர்கொண்டவர்கள் எனவும், பாடசாலைகள் மற்றும் கல்வி வகுப்புகள் மூடப்பட்டமையினால் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியவர்கள் எனவும் கம்மன்பில மேலும் தெரிவித்தார்.

கொரோனா தொற்று, நீடித்த ஆசிரியர்களின் வேலைநிறுத்தம், எரிபொருள்பற்றாக்குறை, மின்வெட்டு மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக போக்குவரத்து துண்டிப்பு என பல இன்னல்களை அனுபவித்தவர்கள் என மேலும் கூறினார்.