சுவாமி அருணகிரிநாதர் புகழ்பாடும் நிகழ்வு - 2025




 























மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகமானது எருவில் பிரதேச அறநெறிப்பாடசாலைகளுடன் இணைந்து ஏற்பாடு செய்த சுவாமி அருணகிரிநாதர் புகழ்பாடும் நிகழ்வானது எருவில் கண்ணகி அம்மன் ஆலய முன்றலில் எருவில் அறநெறி பாடசாலை அதிபர் என். கனகரெத்தினம் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்விற்கு பிரதேச செயலாளர் உ. உதயஸ்ரீதர் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், பிரதேச செயலத்திலிருந்து ஆரம்பமான ஆன்மீக ஊர்வலமானது எருவில் வீதியூடாக கண்ணகை அம்மன் ஆலயத்தினை அடைந்ததும், பூசை நிகழ்வுகள் இடம்பெற்று  கலை நிகழ்வுகள் ஆரம்பமாகின. 

இதன்போது அறநெறிப்பாடசாலை மாணவர்களினால் பேச்சு, பாடல், நாடகம் மற்றும் நடனம் போன்ற கலை நிகழ்வுகள் ஆற்றுகை செய்யப்பட்டதுடன், அவர்களுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.

மேலும் இந்த நிகழ்வின் பொது எருவில் கோடைமேடு நவசக்தி அறநெறி பாடசாலையானது புதிதாக அங்குரார்பணம் செய்து வைக்கப்பட்டமையும் விசேட அம்சமாகும்.

இந்த நிகழ்வில் எருவில் பிரதேச ஆலயங்களின் பிரதிநிதிகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், பிரதேச அறநெறிப்பாடசாலைகளின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள்,  பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்