டித்வா பேரிடரால் பாதிக்கப்பட்ட மன்னம்பிட்டி மாணவர்களுக்கு பாதணிகள் .

 









டித்வா பேரிடரால் பாதிக்கப்பட்ட  மன்னம்பிட்டி மாணவர்களுக்கு சமத்துவ மக்கள் ஒன்றியத்தின் பணிப்பாளர் இரா.விஜயகுமாரன் ஒரு தொகுதி பாதணிகளை வழங்கி வைத்தார்.

அங்கு அண்மையில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் பாடசாலை மாணவர்கள் அனைத்தையும் இழந்த நிலையில் சப்பாத்துக்களுக்கான கோரிக்கை சுவிஸில் வாழும் பாண்டிருப்பைச் சேர்ந்த இரா.விஜயகுமாரனிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

மன்னம்பிட்டி தமிழ் மகா வித்தியாலயத்தில்  கல்வி பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் சப்பாத்துகள் வழங்கி வைக்கப்பட்டன.

பரோபகாரி இரா.விஜயகுமாரன் நேரடியாக ஒன்றிய நிர்வாகிகளுடன் நேரடியாக சென்று நேற்று முன்தினம் வழங்கி வைத்தார்.

அன்றையதினம் அவரது பிறந்த நாளை ஒட்டி அங்கு கேக் வெட்டி பாடசாலை சமூகம் விஜயகுமாரனை கௌரவித்தமை குறிப்பிடத்தக்கது.
 
( வி.ரி.சகாதேவராஜா)