
Batticaloa Early Years School (BEYS) முன்பள்ளியானது ரமணி எட்வர்ட்ஸ் அம்மனியாரால் சுமார் 8 வருடங்களாக மட்டக்களப்பில் “ விளையாட்டு மூலமான கற்றலை” அடிப்படையாக கொண்டு இயங்கி வருகிறது .
நேற்றைய தினம் Batticaloa Early Years School (BEYS) முன்பள்ளியின் செயற்பாடுகளை, ஆக்கங்களை காட்சிப்படுத்தும் நிகழ்வு மிகவும் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது .
பெற்றோர் , பொது மக்கள் , அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் , நண்பர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு சிறார்களை ஊக்கப்படுத்தினார்கள் .
மட்டக்களப்பு கல்வி வலயத்தின் முன்பள்ளி
அபிவிருத்தி உதவிக் கல்விப் பணிப்பாளர் திருமதி அனுரேகா விவேகானந்தன்
அதிதியாக கலந்து கொண்டதோடு முன்பள்ளி சிறார்களின் கல்வி நடவடிக்கை
செயற்பாடுகளை முழுமையாக பார்வையிட்டு தமது பாராட்டுகளையும் ,
வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொண்டார் .
அத்தோடு பங்கேற்ற சிறார்களுக்கு சான்றிதழ் வழங்கி கௌரவித்தார் .
நேற்றைய தினம் சிறார்களுக்கு குதூகலமான தினமாக அமைந்திருந்தது.
Batticaloa Early Years School (BEYS) முன்பள்ளியானது முழுக்க முழுக்க விளையாட்டு மூலமான கற்றலை” (Play-based learning) அடிப்படையாக இயங்கி வருவது விசேட அம்சமாகும் .
சர்வதேச முன் பள்ளி சிறார்களின் கல்வி கற்றல் முறைகள் விளையாட்டு மூலமான கற்றலை அங்கீகரித்துள்ளது , இலங்கை அரசாங்கம் கூட புதிய கல்வி கொள்கையில் விளையாட்டு மூலமான கற்றலை வலியுறுத்தி உள்ளது
குழந்தைகள் விளையாட்டின் மூலம் இயற்கையாகவும், மகிழ்ச்சியாகவும் புதிய திறன்களைக் கற்றுக்கொள்ளும் முறையாகும். இது குழந்தைகளின் அறிவாற்றல், சமூகத் திறன், உணர்ச்சி முதிர்ச்சி மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. கையாளுதல், சிந்தித்தல், குழுவாகச் செயல்படுதல் மற்றும் படைப்பாற்றலை வளர்ப்பதன் மூலம், விளையாட்டு மூளையின் கற்றல் திறனைக் கூர்மைப்படுத்துகிறது.
விளையாட்டு வழி கற்றலினால்
- அறிவாற்றல் வளர்ச்சி: பொம்மைகளை அடுக்குவது, புதிர்களை விடுவிப்பது (puzzles) போன்றவை கணிதம், அறிவியல், மற்றும் சிக்கலைத் தீர்க்கும் திறனை (problem-solving) அதிகரிக்கின்றன.
- சமூக மற்றும் உணர்ச்சித் திறன்கள்: நண்பர்களுடன் விளையாடும்போது பகிர்ந்து கொள்ளுதல், விதிகளைப் பின்பற்றுதல், விட்டுக்கொடுத்தல், மற்றும் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துதல் போன்றவற்றை குழந்தைகள் கற்கின்றனர்.
- உடல் வளர்ச்சி: ஓடுதல், குதித்தல், பந்து எறிதல் போன்ற விளையாட்டுகள் குழந்தைகளின் உடல் ஒருங்கிணைப்பு மற்றும் தசைகளை வலுப்படுத்துகின்றன.
- மொழி மற்றும் கற்பனைத்திறன்: நடித்துக் காட்டுதல் (pretend play) மற்றும் குழு விளையாட்டுகள் மூலம் பேசுதல், சிந்தனைகளைப் பகிர்தல், மற்றும் புதிய வார்த்தைகளை கற்றுக்கொள்ளுதல் ஊக்குவிக்கப்படுகிறது.
- தன்னம்பிக்கை: புதிய விஷயங்களை முயற்சிப்பதன் மூலமும், சவால்களை எதிர்கொள்வதன் மூலமும் குழந்தைகளின் தன்னம்பிக்கை மற்றும் ஆளுமைத்திறன் வளர்கிறது.
- சுயாதீன விளையாட்டு (Free play): குழந்தை தாங்களாகவே விரும்பியதை விளையாடி கற்பது.
- வழிகாட்டப்பட்ட விளையாட்டு (Guided play): பெரியவர்களின் துணையுடன் அல்லது திட்டமிடப்பட்ட விளையாட்டு மூலம் கற்றுக்கொள்வது.
இவ் நிகழ்வு பற்றிய திருமதி அனுரேகா விவேகானந்தன் (ADE) அவர்களின் கருத்து தெரிவிப்பானது, “ மட்டக்களப்பு BEYS PRE SCHOOL OPEN DAY PROGRAMME மிகவும் சிறப்பாக இடம் பெற்றது.பிள்ளைகளுக்கு ஏற்ற வகையில் கற்பித்தல் செயற்பாடுகளை மையப் படுத்தி அனைத்து விடையங்களும் காணப் பட்டது.வெளிக்கள கவின் நிலைகள் மிகவும் நன்றாக இருக்கிறது.முன் பள்ளியின் பின் புறம் மிகவும் கவின் நிலைகள் கொண்டு காணப்படுகிறது.வித்தியாசமான கற்றல் உபகரணங்கள்.உபகரண பயன் பாடுகள் நன்றாக கையாளப் படுகிறது.பிள்ளைகள் முன் மொழிந்த விடையங்கள் யாவும் நன்று.முறையான காட்சிப் படுத்தல்.போதுமான இடவசதி.நல்ல காற்றோட்டம்.சுற்றுப்புறம் கற்றலுக்கு ஏற்ற வகையில் உள்ளது.பார்க்கும் இடமெல்லாம் பேசும் காட்சிகள்.மிகவும் சிறப்பாக இருந்தது பிள்ளைகளின் ஆர்வம் நன்றாக காணப்பட்டது புதிய கற்பித்தல் உபகரணங்கள் காணப் படுகின்றன. அதிபர் அலுவலகம் மிகவும் நன்றாக உள்ளது.ஆவணங்கள் பேணும் முறைகள் சிறப்பு. சீன வடிவமைப்பு மற்றும் எழுத்தாக்க செயற்பாடுகளை அவதானிக்க முடிந்தது இயற்கை வடிவமைப்பு நன்று வரவேற்பு அலங்காரம் நன்றாக உள்ளது. இதனை நான் இன்று பார்க்கும் போது புதிய கல்வி சீரமைப்பு முறையில் காணப்பட்டது.பிள்ளைகளின் புதிய பாடத் திட்டம் மிகவும் பொருத்தமான முறையில் இவர்களுக்கு அமையும் என்று நம்புகிறேன் இதனை ஏற்பாடு செய்த நிறுவக தலைவர் ஆசிரியர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள் ஒத்துழைப்பு வழங்கிய பெற்றோர்கள் அனைவருக்கும் நன்றிகள், 2026 ம் ஆண்டில் புதிய ஒரு நிகழ்வை பார்வை இட்டதில் மிகவும் சந்தோஷம் அடைகிறேன்.” மேற்படி கூற்றில் தெரிவிக்கப்பட்டது.
EDITOR























































