

ஓவியக் கலைஞர் தங்கேஸ்வரன் விக்னேஸ்வரனின் ‘படையல்’ எனும் பழங்குடி
மக்களின் வாழ்வியலைப் பேசும் காண்பியக் கலைக்காட்சி இன்றைய தினம்
2026.04.24 மட்டக்களப்பு புதிய வீதியில் அமைந்துள்ள கூடம் கலையகத்தில்
இடம் பெற்றது , இக் கண்காட்சியானது 24 ம் திகதி தொடக்கம் 26 ஆம் திகதிவரை
மூன்று நாட்கள் இடம் பெற உள்ளது .
‘மூன்றாவதுகண்’ உள்ளூர் அறிவு
திறன் செயற்பாடுகளுக்கான நண்பர்கள் குழு மற்றும் ‘வன்முறையற்ற வாழ்வுக்கான
ஓவியர்கள்’ குழு ஆகியவற்றின் ஒருங்கிணைப்பில் இக்கண்காட்சி ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது.
மட்டக்களப்பைப் பூர்வீகமாகக் கொண்ட பழங்குடி
இனக்குழுமத்தைச் சேர்ந்த த.விக்னேஸ்வரன், தனது கலைப் படைப்புகள் ஊடாக
சமூகத்தின் தனித்துவமான பண்பாடுகளையும், அவர்கள் எதிர்கொள்ளும்
சவால்களையும் பொதுவெளியில் காட்சிப்படுத்தி உள்ளார் .
பழங்குடி
இனத்தைச் சாராதவர்களே இதுவரை அந்த இனக்குழுமம் குறித்து ஆய்வுகளை
மேற்கொண்டு வரும் நிலையில், அந்தச் சமூகத்தைச் சேர்ந்த ஒரு கலைஞரே தனது
மக்களின் வரலாற்றையும், வாழ்வியலையும் கலையினூடாக வெளிப்படுத்துவது ஒரு
முன்னோடியான முயற்சியாகக் கருதப்படுகிறது.
பழங்குடி மக்களின் பாரம்பரிய வாழ்த்துப் பாடல் மற்றும் கொட்டுப் பறையிசையுடன் மிக விமரிசையாக இன்றைய நிகழ்வது ஆரம்பமானது .
இக் கண்காட்சியானது மூன்று நாட்களும் இரவு 7 மணி வரை பொதுமக்களுக்காகத் திறந்திருக்கும்.
படையல்
காண்பியப் படைப்பாக்கப் பகிர்வு என்ற தலைப்பில் விசேட கலந்துரையாடல்
போன்றன இடம் பெற்றன . இதில் கலைஞர்களான கமலாவாசுகி, சு.நிர்மலவாசன் ஆகியோர்
கலந்துகொண்டு கருத்துரைகளை வழங்கினர்.
இன்று மாலை த.விக்னேஸ்வரன் எழுதிய ‘உத்தியாக்கள்’ எனும் கவிதை நூல் வெளியிடப்பட்டது
காண்பியக்
கலைக்காட்சியில் மாணவர்கள் , மற்றும் கலை ஆர்வலர்கள் , பேராசிரியர்கள்
மற்றும் கிழக்கு பழங்குடி மக்களும் கலந்து சிறப்பித்தார்கள் .
பழங்குடி
மக்களின் சடங்குகளை முன்னின்று நடத்தும் மூத்த ஆளுமைகள் மற்றும் கலைஞர்கள்
பங்கேற்ற இந்த நிகழ்வு, மட்டக்களப்பின் கலை வரலாற்றில் ஒரு முக்கிய
பதிவாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது .





















































