யாழ்ப்பாணத்தில் ஒன்லைன் விளையாட்டிற்கு அடிமையான மாணவர் ஒருவர், நேற்று தவறான முடிவெடுத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெல்லிப்பழை - வீமன்காமம் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய கணிதப் பிரிவில் கல்வி கற்று வந்த மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவரது குடும்பத்தில் இவரைத் தவிர ஏனைய உறுப்பினர்கள் அனைவரும் விசேட தேவையுடையவர்கள்.
மாணவன் கைபேசி விளையாட்டுகளுக்குத் தீவிரமாக அடிமையாகியிருந்த நிலையில், தனது உயிரை மாய்த்துள்ளார். அவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டபோது, வித்தியாசமான முறையில் ஆடை அணிந்திருந்ததாகக் கூறப்படுகிறது.





