எமது பாடசாலையில், சுவாமி நீலமாதவானந்த ஜி மகராஜ் அவர்களின் ஆசியுடன், அதிபர் அவர்களின் தலைமையில் பரிசளிப்பு விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக திறைசேரியின் மேலதிக பணிப்பாளர் நாயகம் சிவாநந்தியன் திரு. வ. வாசுதேவன் அவர்களும், கௌரவ விருந்தினராக பேராசிரியர் மருத்துவர் சிவாநந்தியன் P. மயூரதன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் அதிபர் திரு. K. சுவர்ணேஸ்வரன் அவர்களும், பேச்சியம்மன் சித்திவிநாயகர் ஆலயத் தலைவர் சிவாநந்தியன் K. கருணேஸ்வரன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
எமது சிவாநந்தியர்களால் தொகுத்து வழங்கப்பட்ட இந்நிகழ்வு, பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் சிறந்த வழிநடத்தலுடன் மிகவும் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.
நீண்ட காலத்திற்குப் பின்னர் எமது பாடசாலையில் இவ்வாறான ஒரு சிறப்பான பரிசளிப்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டமை மகிழ்ச்சியளிக்கிறது. இதனை சிறப்பாக ஏற்பாடு செய்து வெற்றிகரமாக நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயலாற்றிய அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
அதேவேளை, இந்நிகழ்விற்காக நிதி மற்றும் ஏனைய பங்களிப்புகளை வழங்கிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள். சிவாநந்தியர்கள் சார்பாக தங்களால் இயன்ற பங்களிப்புகளை வழங்கிய அனைவரையும் நன்றியுடன் நினைவுகூர்கிறோம்.
குறிப்பாக, எம்மூடாக ரூபா 110,000 /- நிதிப் பங்களிப்பை வழங்கிய பிரித்தானிய பழைய மாணவர் சங்கத்திற்கு எமது விசேட நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
எமது மாணவர்களின் கல்வி மற்றும் திறமைகளை ஊக்குவிக்கும் இத்தகைய முயற்சிகளுக்கு தொடர்ந்தும் அனைவரினதும் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.












