சிவாநந்தா பழைய மாணவர் சங்கத்தினரின் வருடாந்த வகுப்பு அடிப்படையிலான பழைய மாணவர்களுக்கிடையிலான விளையாட்டு போட்டி-2025

 


 





 













 
 













































































மட்டக்களப்பு சிவாநந்தா வித்தியாலய  பழைய மாணவர் சங்கத்தினால் வருடம் தோறும் இடம்பெறும் வகுப்பு அடிப்படையிலான பழைய மாணவர்களுக்கிடையிலான விளையாட்டு போட்டி  இவ்  வருடமும் 5வது தடவையாக இடம்பெற்றது. 

நடப்பு ஆண்டின்   பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் திரு. N.தினேஷ்குமார் அவர்களின் தலைமையில்  மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் முகாமையாளர் சுவாமி நீலமாதவானந்த  ஜீ மஹராஜ் , இந்தியாவில் இருந்து வருகை தந்துள்ள சுவாமி அபவர்கானந்தர்  ஜீ மஹராஜ் அவர்களின் ஆசியுடன் விளையாட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது.

இந்த வருடம் பழைய மாணவர்களுக்கிடேயே கிரிக்கெட்,  கயிரு இழுத்தல் மற்றும் கரப்பந்தாட்ட போட்டிகள் இடம்பெற்றது. மாலை நேர  பரிசளிப்பு நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக திரு. வ. வாசுதேவன் அவர்களும் கௌரவ விருந்தினராக திரு.S. ரவீந்திரன் அவர்களும் சிறப்பு விருந்தினராக திரு.A. சுதர்சன் , திரு.S. சந்திரகுமார் மற்றும் K.கருணேஸ்வரன் அவர்களும் கலந்துகொண்டு வெற்றி பெற்ற   வகுப்பு அடிப்படையிலான பழைய மாணவர்களுக்கு கிண்ணங்களும் பணப்பரிசில்களும் வழங்கி வைத்தனர்.  

அந்தவகையில் 
 போட்டியிட்டபழைய  மாணவர்களும் வெற்றி பெற்ற மாணவர்களினதும் விபரங்கள் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளன 

கிரிக்கெட்  வெற்றியாளர்கள் - 2007ம்  வகுப்பு பழைய மாணவர்கள் 
2ம் இடம் - 2018ம் ஆண்டு பழைய மாணவர்கள் 
சிரேஷ்ட வகுப்புகளில் 2ம் இடம் - 2003ம் ஆண்டு பழைய மாணவர்கள் 
கனிஷ்ட வகுப்புகளில் 2ம் இடம் - 2009ம் ஆண்டு பழைய மாணவர்கள்.
போட்டி தொடரின் பெறுமதி வாய்ந்த அணி - 1997ம் ஆண்டு பழைய மாணவர்கள்.
போட்டி தொடரின் சிறந்த ஒத்துழைப்பை வழங்கிய அணி - 2006ம் ஆண்டு பழைய மாணவர்கள் ( சிறகுகள் அமைப்பு ) 
 
சிறந்த பந்துவீச்சாளர் - திரு. சோபன் 2018ம்  வகுப்பு பழைய மாணவர் 
சிறந்த களத்தடுப்பாளர்  - திரு. டிணா வகுப்பு பழைய மாணவர் 
சிறந்த துடுப்பாட்டவீரர்  - திரு.ஷங்கர் 2007ம் ஆண்டு வகுப்பு பழைய மாணவர் 
போட்டி தொடரின் ஆட்டநாயகன்  - திரு.ஷங்கர் 2007ம் ஆண்டு வகுப்பு பழைய மாணவர் 
கரப்பந்தாட்டம் 
வெற்றியாளர்கள் - 2012ம் ஆண்டு பழைய மாணவர்கள்.
2ம் இடம் -  2008ம் ஆண்டு பழைய மாணவர்கள்.

கயிறு இழுத்தல் 
வெற்றியாளர்கள் - 2012ம் ஆண்டு பழைய மாணவர்கள்.
2ம் இடம் - 2000ம் ஆண்டு பழைய மாணவர்கள்.