மட்டக்களப்பு- ஏறாவூர் பொலிஸார் (நேற்றிரவு 21.10.2025) ஏறாவூர் நான்காம் குறிச்சி பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது வர்த்தக நிலையம் ஒன்றில் அனுமதிப் பத்திரமின்றி விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ஆயிரத்திற்கு மேற்பட்ட போதை லேகியங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரி பிரதமபொலிஸ் பரிசோதகர் பிரசாத் லியனகே தெரிவித்தார்.
பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவினருக்குக்கிடைத்த இரகசியத் தகவலொன்றினை யடுத்து விசேட தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் கூறினர்.
இந்த வியாபார நிலையத்தில் முலிகை மருந்துப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டபோதிலும் போதைதரும் லேகியம் விற்பனை செய்வதற்கு அனுமதி பெற்றிருக்கவில்லை. இதனால் அனைத்து லேகியங்களையும் கைப்பற்றியதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் வர்த்தகர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் அஜர் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.