மட்டக்களப்பு கல்லடி ஸ்ரீ சித்திவிநாயகர் அறநெறிப் பாடசாலையின்
பொங்கல் விழா கல்லடி ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய கலாசார மண்டபத்தில்
அறநெறிப் பாடசாலை பொறுப்பாசிரியர் திருமதி.சக்தி .அருட்ஜோதி தலைமையில் 2026.01.18-ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக இடம் பெற்றது
ஆரம்ப
நிகழ்வாக சிவ ஸ்ரீ சதீஸ்வரக் குருக்கள் அவர்களால் சூரியனுக்கு நன்றி தெரிவித்து பொங்கல் நிகழ்வும் பொங்கல் பூஜையும் நடத்தப்பட்டது.
அறநெறிப் பாடசாலை சிறார்களின் பொங்கல் விழாவில் ஆலய பரிபாலன சபைத்தலைவர், உபதலைவர், செயலாளர் ,நிர்வாக சபை உறுப்பினர்கள்,
ஆலய போஷகர், இந்து சமய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,
பண்பாட்டலுவல்கள்
அபிவிருத்தி
உத்தியோகத்தர், மற்றும் பெற்றோர் ,பிரதேச வாழ் பொது மக்கள் , சமூக
பற்றாளர்கள் உள்ளிட்ட பலரும் தன்னார்வத்துடன் கலந்து நிகழ்ச்சிக்கு சிறப்பு சேர்த்தார்கள்.
பொங்கல் பூஜை வழிபாடுகளை தொடர்ந்து தமிழர்களின் பாரம்பரிய நிகழ்வுகளுக்கான இறை வணக்கம் வரவேற்பு நடனங்கள் இடம் பெற்றன.
செல்வி.சே.நிதுஷ்ரீ தைப் பொங்கல் பற்றி சிறப்பு பேச்சு வழங்கினார் .
செல்வன். ப. அனுஷாந் கவிதை இசைத்தார் .
பா.மோனிஷ்யன் அவர்களின் பேச்சு அரங்கத்தை மகிழ்வித்தது.
மாணவியரின் தைமகள் பாடல் சிறப்பாக அமைந்தது .
பழைய மாணவர்களின் குறத்தி நடனத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது .
பொங்கல் பண்டிகை விழாவில் பங்கேற்ற சமூக ஆர்வலர்களின் ஆன்மீக உரைகள், அறிவுசார் உரைகள் அனைவரையும் சிந்திக்க வைத்தன .
அறநெறி பாடசாலை ஆசிரியர் விழாவில் பங்கேற்ற ஆர்வலர்கள் ,பெற்றோர்கள், பொதுமக்கள் அனைவருக்கும் நன்றி கூறினார் .
சிறார்களின் அறநெறி கீதத்தோடு விழா இனிதே நிறைவுற்றது .
அறநெறிப்
பாடசாலைகளில் தைப்பொங்கல் நிகழ்வுகள், மாணவர்களுக்குப் பொங்கல்
கொண்டாட்டங்களின் பாரம்பரியத்தையும், அதன் தத்துவத்தையும், கலாசார
விழுமியங்களையும் போதிக்கும் வகையில் நடத்தப்படுகின்றன
; இதில் பொங்கல்
வைத்தல், வழங்குதல், கலாசார நிகழ்வுகள், இறை வழிபாடுகள், நல்லிணக்கத்தை
வளர்த்தல் போன்றவை முக்கிய அம்சங்களாக அமைகின்றன, இதன் மூலம் மாணவர்களிடையே
நல்லொழுக்கத்தையும் சமூகப் பிணைப்பையும் ஏற்படுத்தும் நோக்கமாகக்
கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது .
செய்தி ஆசிரியர்


.jpeg)

.jpeg)




.jpeg)


.jpeg)

.jpeg)





