மட்டக்களப்பு ஆரையம்பதி செல்வா நகர் கிழக்கு சக்தி பாலர் பாடசாலையின் உலக
சிறுவர் மற்றும் ஆசிரியர் தின நிகழ்வு சிறப்பாக இடம் பெற்றது .
பாடசாலை
அதிபர் திருமதி புஷ்பலதா குகாநிதி தலைமையில் முன்னெடுக்கப்படட நிகழ்வில்
பிரதம அதிதியாக முன் பிள்ளைப் பருவ பராமரிப்பும் அபிவிருத்திக்கும்
பொறுப்பான உதவிக் கல்விப் பணிப்பாளர் திருமதி. அனுரேகா விவேகானந்தன் கலந்து
சிறப்பித்தார் .
கௌரவ அதிதியாக செல்வா நகர் கிழக்கு மட் /நவரெட்ணராஜா வித்தியாலய அதிபர் முரளிதரன் சதீஸ்குமார் கௌரவ அதிதியாக கலந்து கொண்டார் .
சிறப்பு
அதிதிகளாக ஆரையம்பதி மண்முனைப்பற்று பிரதேச செயலக முன் பிள்ளைப் பருவ
அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி . கிருஷ்ணப்ரியா விஷ்ணுகாந்த் ,
காத்தான்குடி பிராந்திய அபிவிருத்தி வங்கி உத்தியோகத்தர்களான
T.தினேஷ்குமார் மற்றும் M.ஜெசிதரன் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக
பங்கேற்றிருந்தனர்.
ஆரம்ப நிகழ்வாக பிள்ளைகளினால் அதிதிகளுக்கு
மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டனர் . மங்கல விளக்கேற்றல், இறை
வணக்கம், ஆகிய சம்பிரதாய நிகழ்வுகளும் இடம்பெற்றன.
ஒலிம்பிக் தீபம்
ஏற்றல், உடற்பயிற்சி கண்காட்சி, வினோத உடை, முயல் பாய்ச்சல், என பல்வேறு
பட்ட விளையாட்டுக்கள் செல்லக்குதூகலமாக இடம்பெற்றது.
விளையாட்டு நிகழ்வுகளில் பங்கேற்றிருந்த பாலர் பாடசாலை மாணவர்கள் அதிதிகளால் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள் .
பாடசாலை சமூகத்தால் அதிதிகளுக்கு நினைவுபரிசுகள் வழங்கி கௌரவித்தார்கள்
இதன்போது பாலர் பாடசாலையின் ஆசிரியர்களுக்கு பெற்றோரினால் பரிசில்கள் வழங்கி பாராட்டி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
உலக சிறுவர் மற்றும் ஆசிரியர் தின நிகழ்வுக்கு பெற்றோர்கள் ,பொதுமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தார்கள் .
EDITOR