மட்டக்களப்பு சிவானந்தா கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் ஒருங்கிணைப்பில் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மாத்தளை மக்களுக்கு நிவாரணம்

 







 






 









மட்டக்களப்பு சிவானந்தா கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் ஒருங்கிணைப்பில் பொதுமக்களின் பூரண பங்களிப்பில்  சேகரிக்கப்பட்ட  நிவாரணப்பொருட்கள் அடங்கிய பார ஊர்தி,   அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகிக்கும் பொருட்டு சுமார் 23-இலட்சம் பெறுமதியான நிவாரண பொருட்கள்  மட்டக்களப்பு சிவானந்தா கல்லூரியில் இருந்து    மாத்தளை நோக்கி இன்று காலை புறப்பட்டது .
 
சிவானந்தா கல்லூரி பழைய மாணவர்கள் வீடுவீடாகச்சென்று நிவாரணப்பொருட்களை சேகரித்ததோடு , நிவாரண பொருட்கள் சேர்க்கும் நிலையம் ஒன்றை அமைத்து பொது மக்களிடம் இருந்தும் பொருட்களை பெற்றுக்கொண்டனர் . புலம் பெயர் தேசத்தில் வாழும் சிவானந்தா கல்லூரி பழைய மாணவர்களும் நிதி அனுசரணை வழங்கி இருந்தனர் .
கல்லூரி பழைய மாணவர்களால்   நேற்று மாலை சிவானந்தா கல்லூரி வளாகத்தில் இருந்து பார ஊர்தியில் நிவாரணப்பொருட்கள் ஏற்றப்பட்டன . 
சிவானந்தா கல்லூரி பழைய மாணவரும், நிதி திட்டமிடல் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின்   மேலதிக பணிப்பாளர் நாயகமுமான V.வாசுதேவன் ( மட்டக்களப்பு மண்முனை வடக்கு முன்னாள் பிரதேச செயலாளர் )  மற்றும்  மட்டக்களப்பு மண்முனை வடக்கு  பிரதேச செயலாளர் திருமதி சிவப்ப்ரியா வில்வரெட்ணம் அவர்களும்  பாடசாலைக்கு வருகை தந்து நிவாரணப்பொருட்கள் ஏற்றப்படுவதை பார்வையிட்டதோடு நிவாரண  விநியோக  செயற்திட்டத்தையும் கேட்டறிந்து கொண்டனர் .