தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மட்டக்களப்பு நொச்சிமுனை உதயம்
விழிப்புலனற்றோர் சங்கத்தினரின் ஒழுங்குபடுத்துதலில் 70
பார்வையற்றவர்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது. ஜெர்மன்
தேசத்தில் வாழும் சமூக செயற்பாட்டாளரும் ,தமிழர் நலன்புரிச்சங்க
தலைவருமான சுகி என்பவரின் நிதி அனுசரணையில் குறித்த உலர் உணவுப் பொதிகள்
வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும் .
நிகழ்வுக்கு பிரதம
அதிதிகளாக மட்டக்களப்பு உதவி வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி நிதர்ஷினி
மகேந்திரகுமார் மற்றும் கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்கள பணிப்பாளர்
கே.இளங்குமுதன் கலந்து சிறப்பித்தார்கள் .
சிறப்பு அதிதிகளாக கல்லடி சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக சிரேஷ்ட விரிவுரையாளர் பிரியதர்ஷினி ஜெகதீஸ்வரன் மற்றும்
மட்டக்களப்பு மாவட்ட சமூக சேவை திணைக்கள உத்தியோகத்தர் s. அருள் மொழி ஆகியோரும் பங்கேற்றிருந்தார்கள்.
சமூக பற்றாளரும் இலக்கியவாதியுமான எஸ் .கலைவேந்தன் கௌரவ அதிதியாக கலந்து கொண்டார் .
உதயம்
விழிப்புலனற்றோர் சங்கத் தலைவர் p. டிசந்தனின் ஒருங்கிணைப்பில் இடம்
பெற்ற நிகழ்வுக்கு சங்க ஆலோசகர்களான T. விநாயக மூர்த்தி , I. பகலவன்
மற்றும் T. நேசத்துரை ஆகியோரும் வருகை தந்திருந்தார்கள் .
விழிப்புலனை இழந்தவர்கள் தமது வாழ்வையே தொலைத்துவிட்டவர்களாக ஒருபோதும் அர்த்தப்பட மாட்டார்கள்.
விழிப்புலனற்றவர்களைப்
பிரித்துப் பார்க்கும் மனப்பாங்கு எம்மவர் மத்தியிலே இன்னும்
காணப்படுகிறது. ஆதலால்தான் எமது சமூகத்தில் விழிப்புலனற்றவர்களால்
மேலெழுந்து பிரகாசிக்க முடியவில்லை என்ற கருத்து பலராலும்
முன்வைக்கப்படுகிறது. ஏனெனில், சமூகத்தின் மனப்பாங்கு மாறும் வரை
விழிப்புலனற்றவர்களுடன் கூடிய சமூகம் ஏகவினமான அலகுகளைக் கொண்டிருக்காது.
ஆதலால் தான் விழிப்புலனற்றோரின் முன்னேற்றமும் விருத்தியும் தடைப்படுகிறது.
ஆனால்
இந்தத் தடைக்கற்களை எல்லாம் படிக்கற்களாக்கி வாழ்க்கையில் முன்னேறிய பல
விழிப்புலனற்றோர் எமது நாட்டிலே காணப்படுகிறார்கள் என்பதை எவராலும்
மறுதலிக்க முடியாது.