லண்டன் வோள் தஸ்ரோ ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தின் அனுசரணையில் இலங்கை அகிலன் பௌண்டேஷன் ஏற்பாட்டில் மட்டக்களப்பு நொச்சிமுனை உதயம் விழிப்புலநற்றோர் சங்க மண்டபத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைய அனர்த்தம் காரணமாக பாதிப்படைந்த 70 விழிப்புலனற்றோர்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது .
நிகழ்வுக்கு பிரதம அதிதியாக
வெல்லாவெளி பிரதேச செயலாளர் S.ரங்கநாதன்அவர்களும் சிறப்பு அதிதியாக
களுவாஞ்சிகுடி ஆதாரவைத்தியசாலை சத்திரசிகிச்சை நிபுணர் G.பாமதி அவர்களும்
கௌரவ விருந்தினர்களாக இலங்கை அகிலன் பௌண்டேஷன் பணிப்பாளர் V.R. மஹேந்திரன்
மற்றும் மண்முனை வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் K.ராஜன்
அவர்களும் கலந்து கொண்டார்கள்
கலந்துகொண்ட அதிதிகளால் விழிப்புலனற்றோர்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது .












