பெண்களை ஏமாற்றி பல கோடி ரூபாய் பண மோசடி செய்த நபரை குற்ற புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

 


இலங்கையின் பல்வேறு பகுதிகளில் பெண்களை ஏமாற்றி பல கோடி ரூபாய் பண மோசடி செய்த நபரை குற்ற புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

பத்திரிகைகளில் திருமண விளம்பரங்களை வெவ்வேறு பெயர்களில் வெளியிட்டு பெண்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்த நபர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.

கம்பஹா உடுகம்பொல பகுதியைச் சேர்ந்த நரேஷ் நிஷாந்த தாபரே என்ற 41 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.