மட்டக்களப்பு நொச்சிமுனை உதயம் விழிப்புலனற்றோர் சங்கத்தின் சர்வதேச வெள்ளைப் பிரம்பு தினம்.

 


 

மட்டக்களப்பு நொச்சிமுனை உதயம் விழிப்புலனற்றோர் சங்கத்தின் சர்வதேச வெள்ளைப் பிரம்பு தினம் நேற்று கல்முனை சேனைக்குடியிருப்பு தமிழ்வாணன் மண்டபத்தில் தலைவர் திரு.ஆ. ஜதீஸ் தலைமையில் இடம்பெற்றது.

வெள்ளைப் பிரம்பு விழிப்புணர்வு ஊர்வம் காலை 8.30 மணியளவில் நற்பிட்டிமுனை எரிபொருள் நிரப்பும் நிலையத்திலிருந்து ஆரம்பமாகி சேனைக் குடியிருப்பு தமிழ்வாணன் மண்டபத்தினை சென்றடைந்தது. அங்கு வெள்ளைப்பிரம்பு விழிப்புணர்வு நிகழ்வுகள் இடம் பெற்றதுடன் இன்னிசை நிகழ்வுகளும் இடம் பெற்றது.

பிரதம அதிதியாக நாவிதன்வெளி பிரதேச செயலாளர எஸ்.ரங்கநாதன் கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினர்களாக அம்பாறை மாவட்டம் மாவட்ட சமூர்த்திப் பணிப்பாளர் எம்.எஸ்.எம்.சப்றாஸ் காரைதீவு உதவிப்பிரதேச செயலாளர் எஸ்.பார்த்திபன், காரைதீவு பிரதேசசபை தவிசாளர் கே.ஜெயசிறில் மற்றும் கல்முனை மாநகரசபை உறுப்பினர் கே.செல்வராசா, லயன் என்.விஜிதா கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

15ம் கிராம மத்திய விளையாட்டுக் கழக உறுப்பினர்கள்,
சேனைக்குடியிருப்பு கணேசா வித்தியாலய மாணவர்கள், எமது சங்கத்தின் அங்கத்தவர்கள், பணியாளர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்ததோடு இந்நிகழ்வில் பார்வையற்றவர்களின் இன்னிசை நிகழ்வும் அதிதிகளால் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது.