சிறுவர் மாதிரி தொழிற் சந்தை மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயத்தில் சிறுவர் மாதிரி தொழிற்சந்தை அதிபர் க.செல்வராசா தலைமையில் இன்று நடைபெற்றது.
தரம் ஒன்று தொடக்கம் தரம் ஐந்து வரையான மாணவர்கள் இவ் மாதிரி தெழிற்சந்தையில் தங்களுக்கு பிடித்தமான பல்வேறு பொருட்களை காட்சிப்படுத்தியிருந்தனர். சிறுவர்கள் மத்தியில் இவ்வாறான தொழிற் சந்தைகளை நடத்துவதன் மூலம் மாணவர்கள் மத்தியில் கணித அறிவு, தற்போதைய நிலையில் பொருட்களின் விலைகள், சந்தை காட்சியமைப்பு, கொடுக்கல், வாங்கல் நடைமுறைகள் ஆகியன தொடர்பான அறிவாற்றலை பெற்றுக்கொள்ள முடியும் என அதிபர் க.செல்வராசா தெரிவித்தார்.
இத் தொழிற்சந்தையில் ஆசிரியர்கள், மாணவர்கள், கல்விசார ஊழியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டு பொருட்களை கொள்வனவு செய்தனர்.





