இராமகிருஸ்ண மிசன் வித்தியாலயத்தின் நூலகத்திற்கான நூல்களும் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும் இன்று வழங்கிவைக்கப்பட்டன.


 

மட்டக்களப்பு,மண்முனை தென் மேற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கொக்கட்டிச்சோலை இராமகிருஸ்ண மிசன் வித்தியாலயத்தின்
நூலகத்திற்கான நூல்களும் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும் இன்று வழங்கிவைக்கப்பட்டன.

பிரதேச அபிவிருத்தி வங்கியின் மக்கள் உபகார சேவை திட்டம் 2022இன் கீழ் இந்த நூல்களும் கற்றல் உபகரணங்களும் வழங்கிவைக்கப்பட்டன.

கொக்கட்டிச்சோலை இராமகிருஸ்ண மிசன் வித்தியாலயத்தின் அதிபர் எஸ்.ரவிசங்கர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதேச வங்கியின் மாகாண முகாமையாளர் டபிள்யு அத்துலகுமார,மாவட்ட முகாமையாளர் வை.பி.அஸ்ரப்,உதவி மாவட்ட முகாமையாளர் கே.சத்தியநாதன், கொக்கட்டிச்சோலை பிரதேச அபிவிருத்தி வங்கியின் முகாமையாளர் ஜெ.செந்தில்நாதன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது நூலகத்திற்கான 300புத்தகங்களும் மற்றும் 100க்கு அதிகமான அப்பியாசக்கொப்பிகளும் இதன்போது வழங்கிவைக்கப்பட்டன.

பின்தங்கிய மாணவர்களின் கல்வி மேம்பாட்டினை கருத்தில் கொண்டு இந்த உதவிகள் வழங்கிவைக்கப்பட்டன.