கௌரவ சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட் அவர்கள் துருக்கி நாட்டுத்தூதுவர் அதிமேதகு R .டிமெட் செக்கசியக்குலு (R.Demet Sekercioglu)
அவர்களை சுற்றாடல் அமைச்சில் சந்தித்தார்.
இச்சந்திப்பின் போது இரு நாடுகளுக்குமிடையிலான பரஸ்பர புரிந்துணர்வை கட்டியெழுப்பி அதன் நன்மைகளைப் பெற்றுக்கொள்வது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
குறிப்பாக முதலீட்டு ஊக்குவிப்பு,சுற்றுலாத் திட்டங்கள்,சுற்றாடல் போன்ற விடயங்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
மேலும் எதிர்வரும் 28.10.2022 இல் நடைபெறவுள்ள துருக்கி நாட்டின் 99 வது தேசிய சுதந்திர தின நிகழ்விற்கு பிரதம அதிதியாக நசீர் அஹமட் அவர்கள் அழைக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கதாகும்.

.jpeg)






