91 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு - வைத்தியர் சமில் விஜேசிங்க

 


இறுதியாகக் கிடைக்கப்பெற்றத் தகவலுக்கு அமைவாக 91 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப்பேச்சாளர்          தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (25) நடைபெற்ற அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போதைய சூழ்நிலைக்கு அமைவாக சுகாதார துறையை தொடர்ச்சியாக முன்னெடுத்து செல்வது என்பது சவாலுக்குரிய விடயமாக மாறியுள்ளது.

மருந்துகளுக்கான தட்டுப்பாடு அதேபோன்று மருத்துவ உபகரணங்களுக்கான தட்டுப்பாடு காரணமாக சுகாதார துறையை தொடர்ந்து முன்கொண்டு செல்வது என்பது சவாலுக்குரிய விடயமாகியுள்ளது.

நாட்டில் மருந்து தட்டுப்பாடு, மருத்துவ உபகரணங்களுக்கான தட்டுப்பாடு என்பன இன்று நேற்று ஏற்பட்ட விடயமல்ல.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் என்ற முறையில் நாம் இவ்விடயம் தொடர்பில் தொடர்ச்சியாக அரசாங்கத்தை தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தோம். அரசாங்கத்துக்கு அறிவுறுத்தினோம்.

எம்மிடம் இருந்த தகவல்கள், நாம் திரட்டிய தகல்களுக்கு அமைய சுகாதார துறை எதிர்கொண்டுள்ள சவால்கள் குறித்து அரசாங்கத்துக்கு தொடர்ச்சியாக வலியுறுத்தினோம்.

பொறுப்புவாய்ந்த தொழிற்சங்கம் என்ற முறையில் இது தொடர்பில் நாம் எமது யோசனைகளையும் அரசாங்கத்துக்கு முன்வைத்தோம்.

அந்த யோசனைகளை செயற்படுத்துவதற்கான ஒத்துழைப்பையும் நாம் அரசாங்கத்துக்கு வழங்கினோம்.

எனினும் துரதிருஷ்டவசமாக இந்த சவால்களை நிவர்த்திப்பதற்கு அரசாங்கத்திடம், சுகாதார அமைச்சிடம் சிறந்த வேலைத்திட்டங்கள் இருப்பதை நாம் காணவில்லை.

மருந்துகளுக்கான தட்டுப்பாடு என்பது நாட்டு மக்களின் உயிருக்கு ஆபத்தாக அமையக்கூடிய விடயமாகும்.

எனினும் இவ்விடயத்தில் அரசாங்கமானது பாராமுகமாகவே செயற்படுகின்றது.

இறுதியாகக் கிடைக்கப்பெற்றத் தகவலுக்கு அமைவாக நாட்டில் தற்போது 91 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது.

சேலைனுக்கும் தட்டுப்பாடு நிலவுகின்றது. தேசிய வைத்தியசாலைகளை எடுத்துக்கொண்டாலும் இந்த நிலைமையே காணப்படுகின்றது.

உளவியல் நோய்க்கான மருந்துகளுக்கும் தட்டுப்பாடு நிலவுகின்றது.

அதேபோன்று, ஈசிஜி அறிக்கையை பெற்றுக்கொள்வதற்கான காகிகதத்துக்கும் தட்டுப்பாடு நிலவுகின்றது.

புற்றுநோயாளர்களுக்கு வழங்கப்படும் மருந்துகள், சிறுநீரக நோயாளர்களுக்கு வழங்கப்படும் மருந்துகள் என பல்வேறு நோய்களுக்கு தேவையான மருந்துகளுக்கு பாரியளவு தட்டுப்பாடு நிலவுகின்றது.