மத்திய வங்கி பிணைமுறி மோசடி சம்பவம் தொடர்பாக, முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் உள்ளிட்ட 10 பிரதிவாதிகளுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கி
ன் முன்விசாரணை எதிர்வரும் ஜனவரி மாதம் 28ஆம் திகதி நடத்துமாறு கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ன் முன்விசாரணை எதிர்வரும் ஜனவரி மாதம் 28ஆம் திகதி நடத்துமாறு கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு, கொழும்பு மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகளான பிரியந்த லியனகே (தலைமை நீதிபதி), பி.ஏ.டி. பண்டார மற்றும் நுவன் தம்மிக்க திஸாநாயக்க ஆகியோர் முன்னிலையில் இன்று (02) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
2015ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 02ஆம் திகதி இடம்பெற்ற பிணைமுறி ஏலத்தின் மூலம் அரசாங்கத்திற்கு 688 மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்படுத்தியமை உள்ளிட்ட 23 குற்றச்சாட்டுகளின் கீழ், முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரன், பத்தினிகே சமரவீர, அர்ஜுன அலோசியஸ் உள்ளிட்ட 10 பேருக்கு எதிராக சட்ட மாஅதிபரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் முதலாவது பிரதிவாதியான அர்ஜுன மகேந்திரன் மற்றும் ஆறாவது பிரதிவாதி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அவர்கள் இன்றி வழக்கு விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இரண்டாவது பிரதிவாதி சார்பில் ஆரம்ப ஆட்சேபனைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், அவை தொடர்பான ஆரம்ப சமர்ப்பணங்களை முன்வைப்பதற்கு அடுத்த தவணையில் சந்தர்ப்பம் வழங்கப்படும் என்றும் நீதிபதி நீதிமன்றத்தில் அறிவித்தார்.





